அடுத்து இன்னும் பவர்ஃபுல் வேரோன் சூப்பர் காரை களமிறக்கும் புகாட்டி!!
அடுத்த ஆண்டு துவக்கத்தில் அதிவகே புதிய வேரோன் காரை புகாட்டி நிறுவனம் களமிறக்க இருப்பதாக இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ஆட்டோகார் ஆட்டோமொபைல் இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இப்போதைய வேரோனை விட பெர்ஃபார்மென்ஸில் பின்னி எடுக்கும் காராக சூப்பர் வேரோன் வர இருக்கிறது. கார்பன் ஃபைபரால் ஆன பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த கார் 1,888 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
இந்த காரில் பொருத்தப்படும் டபிள்யூ16 எஞ்சின் 1,500 எச்பி சக்தியை வாரி இறைக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மணிக்கு 450 கிமீ வேகத்தை கடக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த வேகன் டயரின் தரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட உள்ளது. இந்த புதிய சூப்பர் வேரோன் காரின் விலை 5 மில்லியன் பவுண்ட்டுகளாக நிர்ணயிக்கப்பட உள்ளதாம்.







Click it and Unblock the Notifications








