அமெரிக்காவிலிருந்து கிளம்பும் புல்லெட்டா ஆர்எஃப் 22 சூப்பர் கார்
அமெரிக்காவை சேர்ந்த புல்லெட்டா மோட்டார்ஸ் நிறுவனம் சூப்பர் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது. சூப்பர் கார் தொழில்துறை எப்போதுமே சவால்கள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. பல நிறுவனங்கள் இத்துறையிலிருந்து காணாமல் போயுள்ளன. சமீபத்தில் கும்பர்ட் நிறுவனம் கூட தனது வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், புல்லெட்டா மோட்டார்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த துறையில் கால் பதித்துள்ளது. புல்லெட்டா மோட்டார்ஸ் புதிய சூப்பர் காரை அறிமுகம் செய்துள்ளது. லாக்ஹீடு மார்ட்டின் எஃப் ராப்டர் போர் விமானத்தின் டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை மனதில் வைத்து ஆர்எஃப் 22 என்ற பெயரில் புதிய சூப்பர் காரை அறிமுகம் செய்துள்ளது.

பிளாட்ஃபார்ம்
லோட்டஸ் எவோரா சூப்பர் காரை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், லோட்டஸ் கார்களைவிட அதிகப்படியானதாகவும், ஹென்னிஸி பிராண்டின் வெனோம் ஜிடி.,க்கு இணையானதாகவும் பவரையும் கொண்டிருக்கும்.

டிசைனர்
இந்த காரை சமீர் சாத்கோவ் என்ற பிரபல டிசைனர் ஸ்கெட்ச் செய்து கொடுத்துள்ளார். அதன் அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின்
ஆர்எஃப் 22 கார் 2 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. 3.5 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் சூப்பர்சார்ஜர்களின் எண்ணிக்கையை பொறுத்து 400 பிஎச்பி முதல் 505 பிஎச்பி வரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

டிரான்ஸ்மிஷன்
6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும். பேடில் ஷிப்ட்டுடன் கூடிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டும் ஆப்ஷனலாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரான்மிஷன் பின்புற சக்கரங்களுக்கு ஆற்றலை கடத்தும்.

உந்துசக்தி
0- 100 கிமீ வேகத்தை 4.1 வினாடிகள் மற்றும் 3.8 வினாடிகளில் வெளிப்படுத்தும் வகையில் இரு வேரியண்ட்டுகளும் டியூனிங் செய்யப்பட்டுள்ளது.

சேஸீ
லோட்டஸ் எவோராவின் சேஸீதான் இந்த காரில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உடலமைப்பு முழுவதையும் புல்லெட்டா மோட்டார்ஸ்தான் வடிவமைக்கிறது. ஃபைபர்கிளாஸ் பாடியில் கட்டமைக்கப்படுகிறது. அதேவேளை, கார்பன் ஃபைபர் பாடி கட்டமைப்புடனும் கிடைக்கிறது. இந்த கார் 1,324 கிலோ எடை கொண்டது.

சக்கரத்தில் சுவாரஸ்யம்
இந்த காரில் முன்புறத்தில் 19 இஞ்ச் சக்கரங்களும், பின்புறத்தில் 20 இஞ்ச் சக்கரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மிக குறைந்த எடை கொண்டதாக இருக்கிறது. கார்பன் ஃபைபர் வீல் செட் பொருத்தப்பட்டிருக்கிறது. கார்பன் செராமிக் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

கூபே கார்
புல்லெட்டா ஆர்எஃப் 22 கார் அடிப்படையில் கூபே ரகத்தை சேர்ந்தது. பொதுவாக இதுபோன்ற ஸ்போர்ட்ஸ் ரக கார்களில் 2 பேர் இருக்கைகள்தான் பெரும்பாலும் இருக்கும். ஆனால், இந்த காரில் 4 பேர் செல்வதற்கான வசதி கொண்டது. ஆனால், பின் இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும்.

விலை
விலை பற்றிய தகவல்களை புல்லெட்டா வெளியிடவில்லை. அதேவேளை, லிமிடேட் எடிசன் மாடலாக இந்த கார்களை விற்பனை செய்ய புல்லெட்டா விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோட்டஸ் கார்களைவிட நிச்சயம் கூடுதல் விலை கொண்டதாக இருக்கும் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications








