டீலர்களில் என்கொயரி இல்லை... கார்களுக்கு தொடரும் தள்ளுபடி

By Saravana
Car Market
கார் விற்பனை தொடர்ந்து மந்தமாக இருப்பதால் புத்தாண்டிலும் கார்களுக்கான தள்ளுபடி சலுகைகள் தொடர்கிறது.

ஆண்டுதோறும் டிசம்பரில் கார் விற்பனை மந்தமாக இருப்பதால் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், புத்தாண்டில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் டிசம்பர் இறுதியில் டீலர்களில் சென்று விசாரணை மற்றும் புக்கிங் செய்வார்கள்.

இந்த முறை டிசம்பர் இறுதியில் டீலர்களில் வாடிக்கையாளர்கள் வருகை வழக்கத்துக்கு மிக குறைவாகவே இருந்து வருகிறது.

எனவே, தள்ளுபடி சலுகைகளை தொடர்ந்து வழங்க கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இருப்பினும், கார் விற்பனை எதிர்பார்த்த அளவு உயருமா என்பது சந்தேகமே என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று முதல் கார் விலை உயர்வு

இது ஒருபுறம் இருக்க இன்று முதல் பல முன்னணி நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தியுள்ளன. ஆடி கார் நிறுவனம் கார் விலையை ஒரே தடவையில் 5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதேபோன்று, மாருதி, டொயோட்டா, ஹோண்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கார்கள் விலை இன்று முதல் உயர்கிறது.

கார் கடன் வட்டி குறையும்

இந்த ஆண்டு கார் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு இருக்கிறது. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகள் வாகன கடன் துறையின் மீது கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளன.

மேலும், போட்டியை மனதில் கொண்டு வாகன கடனுக்கான வட்டியை குறைக்க பல வங்கிகள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து வங்கிகள் விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 1, 2013, 11:47 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+