கார்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் விபரம்
கார் மார்க்கெட் தொடர்ந்து டல்லடித்து கிடப்பதால், கார் நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகின்றன. எனவே, கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இந்த சமயத்தை பயன்படுத்தி அதிகபட்ச தள்ளுபடி மற்றும் சலுகைகளை பெறுவதற்கான சூழ்நிலை நிலவுகிறது.
பெரும்பாலான கார் மாடல்களுக்கு சலுகைகள் தரப்படுகிறது. குறிப்பாக, பல புதிய மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், இருப்பில் இருக்கும் கார்களை கழித்துக் கட்டும் விதத்தில் சில மாடல்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.எனவே, ஷோரூம்களுக்கு சென்று ஒரு விசாரணையை போட்டு விஷயங்களை தெரிந்துகொண்டு கார் வாங்கும் கனவை நிறைவேற்றும் தருணம் இது.
மேலும், கார் விலையை கூடிய சீக்கிரமே உயர்த்த இருப்பதாக சில நிறுவனங்கள் குண்டு போட்டுள்ளதையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. ரெனோ டஸ்ட்டர், ஹோண்டா அமேஸ் ஆகியவை இந்த சலுகை வட்டத்திற்குள் வரவில்லை. எமக்கு கிடைத்த சலுகை விபரச் சலுகைகளை கார் மாடல்களின் எக்ஸ்ஷோரூம் விலையுடன் ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

ஹூண்டாய் ஐ10
ரூ.53,500 மதிப்புடைய சலுகைகளை பெற முடியும். ரூ.3.75 லட்சம் முதல் ரூ.5.51 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹூண்டாய் சான்ட்ரோ
ரூ.26,300 மதிப்புடைய தள்ளுபடி சலுகைகளை ஹூண்டாய் சான்ட்ரோவுக்கு பெறலாம். ரூ.3.00 லட்சம் முதல் ரூ.3.94 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ஹூண்டாய் எலன்ட்ரா
ரூ.45,000 வரையிலான சலுகைகளை பெற முடியும். ரூ.12.71 லட்சம் முதல் ரூ.16.04 லட்சம் விலையில் கிடைக்கிறது.

ஹூண்டாய் சொனாட்டா
ஹூண்டாய் சொனாட்டா காருக்கு ரூ.1.09 லட்சம் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது. ரூ.18.78 லட்சம் முதல் ரூ.20.87 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹூண்டாய் சான்டா பீ
ஹூண்டாய் சான்டா பீ எஸ்யூவிக்கு ரூ.1.15 லட்சம் வரையில் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது. ரூ.22.39 லட்சம் முதல் ரூ.26.48 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

டாடா ஆரியா
அதிகபட்சமாக ரூ.1.42 லட்சம் வரை சேமிப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. ரூ.10.17 லட்சம் முதல் ரூ.14.95 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா இண்டிகோ இசிஎஸ்
ரூ.48,000 வரையிலான சலுகைகளை பெற முடியும். ரூ.4.98 லட்சம் முதல் ரூ.6.03 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

டாடா நானோ
ரூ.45,000 வரையிலான தள்ளுபடியை நானோ காருக்கு பெறலாம். ரூ.1.53 லட்சம் முதல் ரூ.2.18 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

நிசான் மைக்ரா
ரூ.50,000 வரையிலான சலுகைகளை பெற முடியும். ரூ.4.30 லட்சம் முதல் ரூ.6.75 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகிறது.

ரெனோ பல்ஸ்
ரூ.60,000 வரையிலான சலுகைகள் பெற முடியும். ரூ.4.44 லட்சம் முதல் ரூ.6.81 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

ரெனோ ஸ்காலா
ரூ.55,000 வரையிலான மதிப்புக்கு சேமிப்பு சலுகைகளை பெறலாம். ரூ.7.19 லட்சம் முதல் ரூ.9.68 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

செவர்லே செயில் யுவா
ரூ.28,000 மதிப்புடைய சலுகைகளை பெற முடியும். ரூ.4.19 லட்சம் முதல் ரூ.6.71 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மாருதி ஆல்ட்டோ 800
ரூ.43,000 வரையிலான சேமிப்பு சலுகைகளை ஆல்ட்டோ 800 மீது பெற முடியும். ரூ.2.77 லட்சம் முதல் ரூ.3.36 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

மாருதி ஆல்ட்டோ கே10
ரூ.43,000 வரையிலான சலுகைகளை பெற முடியும். ரூ.3.25 லட்சம் முதல் ரூ.3.38 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

மாருதி வேகன் ஆர்
ரூ.46,000 வரையிலான சலுகைகளை பெற முடியும். ரூ.3.61 லட்சம் முதல் ரூ.4.48 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

மாருதி எஸ்எக்ஸ்-4
மாருதி எஸ்எக்ஸ்-4 காருக்கு ரூ.83,000 வரை தள்ளுபடி சலுகைகளை பெற முடியும். ரூ.7.38 லட்சம் முதல் ரூ.9.80 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது.

மாருதி எர்டிகா டீசல்
ரூ.43,000 வரையிலான சலுகைகளை மாருதி எர்டிகா டீசல் காருக்கு பெற முடியும்.ரூ.7.39 லட்சம் முதல் ரூ.8.71 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா குவான்ட்டோ
ரூ.26,000 மதிப்புடைய சேமிப்பை மஹிந்திரா குவான்ட்டோ மீது பெற முடியும். ரூ.5.99 லட்சம் முதல் ரூ.7.75 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டீலரை அணுகவும்
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விலை மற்றும் சலுகைகள் விபரம் டீலருக்கு, டீலர் மாறுபடும். கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டீலரை அணுகவும்.


Click it and Unblock the Notifications








