அமெரிக்காவில் பந்தய கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து!
அமெரிக்காவின் டேடோனாவில் நடந்த பிரபலமான நாஸ்கார் கார் பந்தயத்தில், கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 33 பேர் காயமடைந்தனர். கடைசி சுற்றின்போது 200 மீட்டர் தூரத்தில் இருந்த எல்லைக்கோட்டை கடக்க அதிவேகத்தில் முன்னால் செல்ல முயன்ற கார் எஞ்சின் தீப்பிடித்தது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவற்றில் மோதிய அந்த கார் பறந்து வந்து ரேஸ் டிராக்கில் விழந்தது. அப்போது, பின்னால் வந்துகொண்டிருந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால் பெரும் விபத்து ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய கார் மீதும் பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதியதால் அந்த காரின் சுக்குநூறாக உடைந்ததோடு, அதன் பாகங்கள் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் பறந்து போய் விழுந்தன.
இதனால், அங்கு அமர்ந்திருந்த பார்வையாளர்கள் அலறி அடித்து ஓடினர். இதனால், அந்த பகுதியே பெரும் களேபரமானது. உடனடியாக, மீட்புப் படையினர் விரைந்து வந்து காருக்குள் சிக்கியிருந்த வீரர்களையும், காயமடைந்த பார்வையாளர்களையும் மீட்டு மருத்துமனைக்கு அனுப்பினர்.
இந்த விபத்தில், காரை ஓட்டிய வீரர்கள் மட்டுமின்றி அரங்கினுள் அமர்ந்திருந்த பார்வையாளர்களும் சேர்த்து 33 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு குறித்தும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

பந்தய கார்கள் மோதி விபத்து

பந்தய கார்கள் மோதி விபத்து

பந்தய கார்கள் மோதி விபத்து

பந்தய கார்கள் மோதி விபத்து

பந்தய கார்கள் மோதி விபத்து

பந்தய கார்கள் மோதி விபத்து

பந்தய கார்கள் மோதி விபத்து

பந்தய கார்கள் மோதி விபத்து

பந்தய கார்கள் மோதி விபத்து



Click it and Unblock the Notifications








