கார் நிறுவனங்களின் பண்டிகை கால சலுகைகள் - ஒரு பார்வை

பண்டிகை காலம் களை கட்டியுள்ளதையடுத்து, வாடிக்கையாளர்களை தம் பக்கம் கவர்ந்திழுப்பதற்காக கார் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. சிறப்பு தள்ளுபடி, இலவச இன்ஸ்யூரன்ஸ் ஆகியவை தவிர பல்வேறு பொருட்களை வெல்வதற்கான வாய்ப்பு தற்போது இருக்கிறது.

சிறப்பு சலுகைகள் குறித்த விபரங்களை மட்டுமின்றி, அந்த காரின் விலை, சிறப்பம்சங்கள், ஒப்பீட்டு விபரங்களை எளிதாக பெறும் வகையில் புதிய கார்களை பற்றி தெரிந்துகொள்வதற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ரெனோ ஆஃபர்

ரெனோ ஆஃபர்

டஸ்ட்டர் மற்றும் ஸ்காலா கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை வெல்வதற்கான சிறப்பு திட்டத்தை ரெனோ அறிவித்துள்ளது. தவிர, ஒவ்வொரு முன்பதிவுக்கும் நிச்சய பரிசுகளை பெற முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

 செவர்லே

செவர்லே

நவராத்திரி பண்டிகையையொட்டி அனைத்து கார்களுக்கும் சிறப்பு சலுகைகளை செவர்லே அறிவித்துள்ளது. பீட் காருக்கு ரூ.66,000 வரையிலும், செயில் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.38,000 வரையிலும், என்ஜாய் எம்பிவிக்கு ரூ.33,000 வரையிலும், ஸ்பார்க் காருக்கு ரூ.58,000 வரையிலும், செயில் செடானுக்கு ரூ.40,000 வரையிலும் சிறப்பு சலுகைகளை பெறலாம். இதில், அதிகபட்சமாக குரூஸ் காருக்கு ரூ.85,000 வரை சேமிப்பை பெற முடியும் என்று செவரேல் தெரிவிக்கிறது.

 டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், தற்போது அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒரு ரூபாயில் இன்ஸ்யூரன்ஸ், ஒரு கிராம் தங்க நாணயம், இதர சேமிப்பு சலுகைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு ரூ.1.23 லட்சம் வரையிலும், இண்டிகோ இசிஎஸ் காருக்கு ரூ.54,000 வரையிலும், விஸ்டா காருக்கு ரூ.89,000 வரையிலும், சுமோ கோல்டுக்கு ரூ.60,500 வரையிலும், இண்டிகா காருக்கு ரூ.44,000 வரையிலும், மான்ஸாவுக்கு ரூ.1.41 லட்சம் வரையிலும் சலுகைகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் வரும் 31ந் தேதி வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது. இலவச இன்ஸ்யூரன்ஸ், இலவச அவசர சாலை உதவி திட்டம் மற்றும் 3 ஆண்டுகளுக்கான இலவச பராமரிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. தவிர, குலுக்கல் முறையில் தினசரி ஐபேட், ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் எண்ணற்ற பரிசுகளை வெல்வதற்கான திட்டங்களையும் அறிவித்துள்ளது. பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய கார் வாங்குவோருக்கு ரூ.20,000 வரை போனஸ் வழங்குவதாகவும் தெரிவிக்கிறது. வரும் 31ந் தேதி வரை இந்த சலுகைகளை பெற முடியும்.

ஃபோர்டு

ஃபோர்டு

ஃபோர்டு ஃபியஸ்ட்டா காருக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிப்பை பெறும் சிறப்பு சலுகை திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஃபோர்டு டீலரை அணுகவும்.

டீலரை அணுகுங்கள்

டீலரை அணுகுங்கள்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள சலுகை விபரங்கள் டீலருக்கு டீலர் மாறுபடலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை தொடர்பு கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, October 7, 2013, 10:12 [IST]
English summary
Carmaker are presenting some fabulous offers to make your Durga Puja and Dasara even more memorable. Book a car between this festival season and stand a chance to win exiting prices and gifts.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+