ஜனவரி முதல் விலை உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி தரும் கார் நிறுவனங்கள்
ஜனவரி முதல் கார் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடியை தந்துள்ளது.
ஜனவரி முதல் பிஎம்டபிள்யூ, ஆடி கார் நிறுவனங்கள் 5 முதல் 10 சதவீதம் வரை கார் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துவிட்டன. இதைத்தொடர்ந்து, மாருதி, ஹூண்டாய், டொயோட்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்த இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆண்டு கடைசி என்பதால் டிசம்பரில் கார் விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால் பல முன்னணி நிறுவனங்கள் சலுகைகளை வழங்குவதாக அறிவித்து வருகின்றன. இது வாடிக்கையாளர்களை கவரும் என்றாலும், புத்தாண்டு வந்ததும் கார் வாங்கலாமே என்று பல வாடிக்கையாளர்கள் திட்டமிட்டு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், ஜனவரி முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மாருதி, ஹூண்டாய் மற்றும் டொயோட்டா உயரதிகாரிகள் விலை உயர்வு இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதுபோன்று, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கார் விலையை 2 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. உற்பத்தி செலவீனம் அதிகரிப்பை காரணம் காட்டி விலை உயர்வை மேற்கண்ட நிறுவனங்கள் எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








