மே மாதத்தில் கார் விற்பனை 12.3 சதவீதம் சரிவு: ஒப்பீட்டு விளக்க படம்
வாகன மார்க்கெட் தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது. இதனால், தயாரிப்பாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வாடிக்கையாளர்களை கவர்வதற்கு கவர்ச்சிகர சலுகைகளையும் அறிவித்து வருகின்றனர்.
ஆனால், இதற்கெல்லாம் போதிய பலன் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக 7வது மாதமாக கடந்த மே மாதத்திலும் வாகன விற்பனையில் மீட்சி பெறாமல் சுணக்க நிலையிலேயே இருந்தது. கடந்த மாத விற்பனையுடன், கடந்த ஆண்டு மே மாத வாகன விற்பனையை ஒப்பிட்டு பார்த்தால் ஒட்டுமொத்த வாகன விற்பனையில் 0.93 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக, கார் விற்பனையில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 1,63,222 கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 1,43,216 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. கார் விற்பனை 12.26 சதவீதம் சரிவு கண்டுள்ளது.
இருசக்கர வாகன விற்பனை சிறிதளவு வளர்ச்சி கண்டு 1.13 சதவீதம் என்ற அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கார் விற்பனை குறைந்து வருவதால் வேலைவாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆட்டோமொபைல் துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலே உள்ள படத்தில் கடந்த மாத வாகன விற்பனையுடன், கடந்த ஆண்டு மே மாத விற்பனையுடனான ஒப்பீட்டை காணலாம்.


Click it and Unblock the Notifications








