ஜூனிலும் கார் விற்பனையில் பெரும் சரிவு: கவலையில் தயாரிப்பாளர்கள்

கடந்த மாதம் உள்நாட்டு மார்க்கெட்டில் மொத்தம் 1,39,632 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1,53,450 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் விற்பனை 9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
ஸ்திரமற்ற பொருளாதார நிலை, அதிக வட்டி வீதங்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்டவை கார் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள காரணிகளாக கூறப்படுகின்றன.
இந்த நிலை நீடித்தால் நடப்பு நிதி ஆண்டில் கார் விற்பனை வளர்ச்சி கணிசமாக சரியும் என இந்தியா ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் கவலை தெரிவித்துள்ளது. கடந்த மே மாதமும் உள்நாட்டு கார் விற்பனை 9 சதவீதம் வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








