கார்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி மற்றும் சலுகைகள் விபரம்!
கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். ஒரு காருக்கு ஒரு கார் இலவசம், ஓர் ஆண்டுக்கு மாதத் தவணை கட்ட வேண்டாம் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன கார் நிறுவனங்கள்.
இதுவரை சலுகைகளை அதிகம் காட்டாத மாருதி நிறுவனமும் சலுகைகளை வாரி வழங்குகிறது. ஆல்ட்டோ 800 முதல் ஆடி ஏ4 கார் வரை சலுகைகள் கிடைக்கின்றன. இந்த நிலையில், தற்போது கார்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆல்ட்டோ 800
ரூ.30,000 தள்ளுபடி கிடைக்கும்.

மாருதி வேகன்-ஆர்
ரூ.28,000 தள்ளுபடி கிடைக்கும்.

ஹூண்டாய் ஐ10
ரூ14,000 தள்ளுபடி மற்றும் ரூ.17,000 மதிப்புடைய இலவச இன்ஸ்யூரன்ஸ்

மஹிந்திரா குவான்ட்டோ
ரூ.20,000 தள்ளுபடியாக கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ
பெட்ரோல் மாடலுக்கு ரூ.24,000 மதிப்புடைய இலவச இன்ஸ்யூரன்ஸ்

நிசான் சன்னி
ரூ.17,000 தள்ளுபடி கிடைக்கும்.

மஹிந்திரா ஸைலோ
ரூ.52,000 தள்ளுபடி கிடைக்கும்.

நிசான் எவாலியா
2012ம் ஆண்டு தயாரிப்பு காருக்கு ரூ.1.25 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்.

டாடா ஆரியா
2012ம் ஆண்டு தயாரிப்பு காருக்கு ரூ.2 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்.

செவர்லே குரூஸ்
ரூ.58,000 மதிப்புடைய இலவச இன்ஸ்யூரன்ஸ் வழங்கப்படுகிறது.

டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்
ரூ.29,000 தள்ளுபடி கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் பஸாத்
ரூ.1.75 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்.

ஹூண்டாய் சொனாட்டா
ரூ.1.50 லட்சம் தள்ளுபடி பெறலாம்.

ஆடி ஏ4
2012ம் ஆண்டு தயாரிப்பு 2.0 டிடிஐ வேரியண்ட்டுக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காருக்கு ரூ.3.5 லட்சம் வரையிலும், 5 சீரிஸ் காருக்கு ரூ.5 லட்சம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பென்ஸ் சி கிளாஸ்
பென்ஸ் சி கிளாஸ் காருக்கு ரூ.3 லட்சம் வரையிலும், இ கிளாஸ் செடானுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் டீலர்களில் தள்ளுபடி கிடைக்கிறது.

மஹிந்திரா வெரிட்டோ
இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.7,000 கார்ப்பரேட் போனசாக கிடைக்கும்.

எக்ஸ்சேஞ்ச் சலுகை
பெரும்பாலான நிறுவனங்கள் கார் எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.20,000 வரையிலும், கார்ப்பரேட் போனசாக ரூ.10,000 வரையிலும் வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications








