கேட்டர்ஹாம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்போர்ட்ஸ் கார்!
இங்கிலாந்தை சேர்ந்த கேட்டர்ஹாம் நிறுவனம் இலகு எடை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. வித்தியாசமான டிசைன் கொண்ட கேட்டர்ஹாம் கார்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. இந்தியாவிலும் இந்த நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார்களை டாபர் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. மேலும், ரேஸ் பிரியர்கள் இந்த காரை வாடகைக்கு எடுத்து ஓட்டும் வாய்ப்பையும் வழங்க இருக்கிறது.
இந்த நிலையில், குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு ஆட்டோமொபைல் திருவிழாவில் கேட்டர்ஹாம் நிறுவனம் தனது புதிய பவர்ஃபுல் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. கேட்டர்ஹாம் 620ஆர் என்ற பெயரில் இந்த புதிய காரும் தனது பழமையான கிளாசிக் செவன் காரின் நீண்ட மூக்கு கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

எஞ்சின்
ஃபோர்டு நிறுவனத்தின் 2.0 லிட்டர் எஞ்சினை சூப்பர்சார்ஜர் உதவியுடன் 311 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் வகையில் மாற்றி பொருத்தி இருக்கிறது கேட்டர்ஹாம்.

இலகு எடை
இந்த கார் வெறும் 545 கிலோ எடை மட்டுமே கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அபார உந்துசக்தி
0-100 கிமீ வேகத்தை 3 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் எட்டும் வல்லமை பொருந்தியது.

பெயர் காரணம்
இந்த கார் வெறும் 500 கிலோவுக்கும் சற்று அதிகமானது என்பதால், அபார சக்தியை எளிதாக வெளிப்படுத்துகிறது. ஒரு டன்னுக்கு கணக்கிடுகையில் 620 எச்பி என்ற அளவில் சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. எனவேதான் இந்த மாடலுக்கு 620ஆர் என பெயரிடப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு
மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

ஏரோடைனமிக்
இந்த காரின் நீண்ட மூக்குப் பகுதி சிறப்பான ஏரோடைனமிக் டிசைனை கொண்டிருப்பதால், எளிதாக சீறிப்பாயும். இதன் எஞ்சின் கூலிங் சிஸ்டம் கேட்டர்ஹாம் ரேஸிங் எந்திரங்களை அடிப்படையாகக் கொண்டது.

அலாய் வீல்
இந்த காரில் ஏவோன் இசட்இச்டஆர் 13 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

சிஇஓ., பெருமிதம்
சாலையில் ஓட்டத்தக்க இந்த கார்தான் கேட்டர்ஹாமின் இலகு எடையுடன் அதிக சக்தி கொண்ட காராக வெளிவருகிறது. ஆர்500 காருக்கு மாற்றாக இந்த காரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் நிச்சயம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று தெரிவித்தார்.

விலை
இங்கிலாந்தில் இந்த கார் 49,995 பவுண்ட் விலையில் விற்பனைக்கு வருகிறது.





Click it and Unblock the Notifications








