குறைந்த விலை சொகுசு கார்களை களமிறக்கும் பென்ஸ், பிஎம்டபிள்யூ
ஆரம்ப ரகம் கொண்ட குறைந்த விலை சொகுசு கார்களை அறிமுகப்படுத்துவதில் தற்போது கார் நிறுவனங்களிடையே போட்டா போட்டி நிலை ஏற்பட்டுள்ளது.பிஎம்டபிள்யூ, ஆடியின் நெருக்கடியால் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட பென்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு குறைந்த விலை கொண்ட பி கிளாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.22 லட்சம் ஆரம்ப விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்தது.
இந்த நிலையில், இதைவிட குறைந்த விலையில் ஏ கிளாஸ் காரையும் பென்ஸ் களமிறக்குகிறது. அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்குள் மிகச் சவாலான விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முதலிடத்தில் இருக்கும் பிஎம்டபிள்யூவுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டியை சமாளிக்கும் வகையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்கு 1 சீரிஸ் ஹேட்ச்பேக் காரை பிஎம்டபிள்யூ விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதனை பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிலிப் வான் சர் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பரில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வர இருக்கிறது.
இதனால், சொகுசு கார் மார்க்கெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் போட்டி ஏற்படும் என தெரிகிறது. மேலும், குறைந்த விலை கார்கள் டி + செக்மென்ட் கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் நிலையும் உருவாகியிருக்கிறது.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்



Click it and Unblock the Notifications








