இந்தியாவில் புதிய பீட் கார் அறிமுகத்தை உறுதி செய்த ஜிஎம்
இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட செவர்லே பீட் காரை விற்பனைக்கு கொண்டு வருவதை ஜெனரல் மோட்டார்ஸ் உறுதி செய்துள்ளது.
2009ல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட செவர்லே பீட் காரை சர்வதேச அளவில் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. பிற மார்க்கெட்டுகளில் ஸ்பார்க் என்று அழைக்கப்படும் இந்த கார் தற்போது வடிவமைப்பில் மாறுதல்களுடனும், கூடுதல் வசதிகளுடனும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த புதிய பீட் கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்வி இருந்து வந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் இந்தியாவில் புதிய பீட் கார் அறிமுகத்தை ஜெனரல் மோட்டார்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், 2015ம் ஆண்டில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிரவும், மேம்படுத்தப்பட்ட ஏவியோ கார் அறிமுகத்தையும் ஜெனரல் மோட்டார்ஸ் தள்ளிப்போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








