டஸ்ட்டரை விடுங்க.. இந்த செவி எஸ்யூவி எப்படியிருக்கு பாருங்க!

ஆட்டோமொபைல் துறையில் இருப்பவர்களையும், கார் பிரியர்களையும் பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கும் புதிய செவர்லே ட்ராக்ஸ் எஸ்யூவி வரும் 14ந் தேதி பிரேசில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. டிராக்கர் என்ற பெயரில் அங்கு விற்பனைக்கு வரும் இந்த எஸ்யூவி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் ட்ராக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட்டை விட ஓர் சிறந்த தேர்வாக இருக்கும் என்பது பரவலான கருத்தாக உள்ளது. டிசைன், தொழில்நுட்ப வசதிகள், சிறந்த எஞ்சின் ஆகியவை இந்த எஸ்யூவிக்கு நிச்சயம் பெரிய வரவேற்பை கொடுக்கும். இந்தியாவில் விலை நிர்ணயத்தை பொறுத்தே பல மாடல்களின் வெற்றி தோல்வி இருக்கும்.

ஆனால், விலையையும் தாண்டி இந்த எஸ்யூவி சாதிக்கும் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் கருத்து. செவர்லேவுக்கு மட்டுமல்ல இந்திய வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவிக்கு குறித்த சில முக்கியத் தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்ளலாம்.

பிளாட்பாரம்

பிளாட்பாரம்

ஓபல் மொக்கா எஸ்யூவி பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி 4.2 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 1.77மீட்டர் அகலம் கொண்டதாகவும் இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

பிரேசிலில் 1.6 லிட்டர் மற்றும் 1.8 லிட்டர் ஈக்கோடெக் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. எல்டி மற்றும் எல்டிஇசட் ஆகிய இரு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்தியாவில் 1.4 லிட்டர், 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களிலும், 1.7 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

5 பேர் தாராளமாக பயணம் செய்யும் வசதியை கொண்டிருக்கும். இதுதவிர, பொருட்கள் வைப்பதற்கான சிறந்த பூட் ரூமையும் கொண்டிருக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், எலக்ட்ராக்னிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் ஆகியவை ஸ்டான்டர்டு அம்சங்களாக இருக்கும்.

அலாய் வீல்

அலாய் வீல்

இந்த எஸ்யூவியில் 17 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் கம்பீரமாக இருக்கும்.

விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.15.9 லட்சம் முதல் ரூ.19.9 லட்சம் விலையில் பிரேசிலில் விற்பனைக்கு வருகிறது. ஆனால், இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாப் என்ட் ஆட்டோமேட்டிக் மாடலில் லெதர் இருக்கைகள், ஸினான் ஹெட்லைட்டுகள், கண்ணாடி கூரை போன்றவற்றை கொண்டிருக்கும். இந்த டாப் என்ட் மாடல் ரூ.12 லட்சத்தில் விலை கொண்டதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 13, 2013, 10:59 [IST]
English summary
American carmaker General motors is all set to launch new compact suv Chevy Trax suv in Brazil market on 14th July.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+