செவர்லே கார்களுக்கான இலவச சர்வீஸ் முகாம்: இன்றும், நாளையும் நடக்கிறது
செவர்லே கார்களுக்கான இலவச பரிசோதனை முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது. நாடு முழுவதும் உள்ள 250 அங்கீகாரம் பெற்ற செவர்லே சர்வீஸ் மையங்களில் இந்த பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த இலவச பரிசோதனை முகாமில் உதிரிபாகங்கள், லேபர் சார்ஜ் மீது தள்ளுபடிகளை பெற முடியும். மேலும், கவர்ச்சிகரமான பரிசுகளையும் வழங்குவதாக செவர்லே அறிவித்துள்ளது.
இந்த சர்வீஸ் முகாமில் கார் பரிசோதனை மட்டுமின்றி டெஸ்ட் டிரைவ், கார் எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாய்ப்பையும் வழங்குவதாக செவர்லே தெரிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு செவர்லே கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு அருகிலுள்ள செவர்லேயின் அங்கீகாரம் பெற்ற டீலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications








