அடுத்த வாரம் செயில் கார்களின் உற்பத்தி மீண்டும் துவங்குகிறது
தர குறைபாடுகளால் உற்பத்தி நிறுத்தப்பட்ட செயில் யுவா மற்றும் செயில் செடான் கார்களின் உற்பத்தி இந்த மாத இறுதியில் துவங்கப்பட உள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
செவர்லே செயில் மற்றும் செயில் செடான் கார்களில் தர குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதால், கடந்த மாதம் 11ந் தேதி உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால், என்ன காரணத்தால் உற்பத்தி நிறுத்தப்பட்டது என்பது குறித்து செவர்லே எதுவும் தெரிவிக்கவில்லை. செயில் கார்கள் மட்டுமின்றி மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னை காரணமாக பிஎஸ்- 3 தவேரா காரின் உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மாத இறுதி முதல் செயில் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் துணைத் தலைவர் பி.பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாத இறுதியிலிருந்து பிஎஸ்- 3 தவேரா காரின் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த நிலையில், தர குறைபாடு இருந்தால் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட செயில் கார்களும் திரும்ப பெற வேண்டும். ஆனால், இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் விளக்கமும் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








