2 மாதங்களில் செவர்லே செயில் செடானுக்கு 7,000 பேர் முன்பதிவு

செவர்லே செயில் செடானுக்கு முன்பதிவு சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1 ல் அறிமுகம் செய்யப்பட்ட செயில் செடான் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டு 2 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் செவர்லே செயில் செடானுக்கு இதுவரை 7,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

மாருதி டிசையரின் விலையை ஒட்டியதாக இருக்கும் வகையிலேயே செயில் செடானின் விலையை செவர்லே நிர்ணயித்தது. இதற்கு தற்போது நல்ல பலன் கிட்டியிருக்கிறது. டிசைன், சரியான விலை மற்றும் சிறந்த எஞ்சின்கள் ஆகியவை செயில் செடானுக்கு கூடுதல் பலமாக இருந்து வருகிறது. செயில் செடானின் முக்கிய அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

செயில் யுவா ஹேட்ச்பேக் மாடலின் செடான் வெர்ஷன் என்பதால் முகப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால், பின்புறம் சமரசம் இல்லாமல் சிறப்பாகவே செடான் வெர்ஷனாக மாற்றியிருக்கிறது செவர்லே. மொத்தத்தில் தோற்றத்தில் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது செயில் செடான்.

டூயல் காக்பிட்

டூயல் காக்பிட்

டூயல் காக்பிட் செவர்லேயின் பிரபல ஸ்போர்ட்ஸ் கார் மாடலான கார்வெட் காரின் காக்பிட்டை கண்டு ஈர்க்கப்பட்ட செயில் செடான் டிசைனர்கள் அதே போன்று டூயல் காக்பிட்டாக இருக்கும் வகையில் வடிவமைத்து இருக்கின்றனர்.

 எஞ்சின்

எஞ்சின்

86 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 78 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 5 ஸ்பீட் கியர் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

அனலாக் ஸ்பீடோமீட்டருடன், டிரிப் மீட்டர் உள்ளிட்டவை டிஜிட்டல் டிஸ்ப்ளேயுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.1 கிமீ மைலேஜையும் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

டில்ட் ஸ்டீயரிங்

டில்ட் ஸ்டீயரிங்

டிரைவரின் உடல்வாகுக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளும் டில்ட் ஸ்டீயரிங் வசதி இருக்கிறது.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

அனைத்து இணைப்பு வசதிகளுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

லெக் ரூம்

லெக் ரூம்

செயில் செடான் சிறந்த லெக் ரூம் கொண்ட காராக வந்திருக்கிறது. எனவே, பயணத்தின்போது எப்போது இறங்குவோம் என்ற மனநிலை இருக்காது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருப்பதால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.

டூயல் ஏர்பேக்ஸ்

டூயல் ஏர்பேக்ஸ்

டூயல் ஏர்பேக்ஸ் பொருத்தப்பட்டிருப்பதால் விபத்துக்கள் ஏற்பட்டால், கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

சென்னை ஆன்ரோடு விலை

சென்னை ஆன்ரோடு விலை

பெட்ரோல்

பேஸ் வேரியண்ட்: ரூ.5,82,447

1.2 எல்எஸ் : ரூ.6,40,552

1.2 எல்எஸ் ஏபிஎஸ்: ரூ.6,70,588

1.2 எல்டி ஏபிஎஸ்: ரூ.7,47,118

டீசல்

1.3 பேஸ் வேரியண்ட் : ரூ.7,32,620

1.3 எல்எஸ்: ரூ. 7,67,623

1.3எல்எஸ்ஏபிஎஸ்: ரூ.7,97,657

1.3 எல்டி ஏபிஎஸ் : ரூ.8,74,189

சொகுசான பின் இருக்கை

சொகுசான பின் இருக்கை

பின் இருக்கையில் ஆர்ம் ரெஸ்ட்டை மடக்கி இருக்கையுடன் பொருத்திவிட்டால் 3 பேர் தாராளமாக அமரலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2013, 12:52 [IST]
English summary
Chevrolet Sail has bagged as many as 7000 bookings with in the just 2 months from its launch. General Motors has launched Chevrolet Sail sedan on 1st February in India at a starting price of 4.99 Lakh ex-showroom Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+