செவர்லே செயில் செடான் பற்றிய தகவல்கள் வெளியீடு

By Saravana
Chevrolet Sail
இந்த மாதம் அறிமுகமாக இருக்கும் செயில் செடான் பற்றிய தகவல்கள் செவர்லே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் செயில் ஹேட்ச்பேக் காரை செவர்லே அறிமுகம் செய்தது. தற்போது இதே பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய செடான் காரை செவர்லே அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த புதிய செடான் காரை பற்றிய விபரங்களை தனது இணையதளத்தில் செவர்லே வெளியிட்டிருக்கிறது. புதிய செடான் காரில் 84 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 76 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், காற்றுப் பைகள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு வசதிகளை இந்த கார் கொண்டிருக்கும். சீனாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மாருதி டிசையர், டொயோட்டா எட்டியோஸ் கார்களுக்கு இந்த புதிய செடான் கார் நேரடி போட்டியை கொடுக்கும். இந்த மாதத்திலேயே இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 1, 2013, 16:41 [IST]
English summary
The Chevrolet Sail sedan is on show, not in the metal though but in Chevrolet India's website. The Chevrolet Sail sedan is expected to be launched in early 2013 and the launch could happen as early as this month itself.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+