தமிழகத்துக்கு வடபோச்சே.. புனேயில் ஆலை அமைக்கும் கிரேட் வால்!
சீனாவின் பிரபல எஸ்யூவி கார் தயாரிப்பு நிறுவனமான கிரேட்வால் இந்தியாவில் விரைவில் காலடி எடுத்து வைக்க உள்ளது. இதற்காக, புனேயில் தனது கார் ஆலையை அமைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதலாவதாக, ஹவெல் எச்5 எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முதலில் புதுடெல்லியை சேர்ந்த இன்டர்நேஷனல் கார் அண்ட் மோட்டார் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து கார் உற்பத்தியை துவங்க அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், கூட்டணி அமைப்பதில் பல தடங்கல்கள் இருந்ததால், தற்போது தனியாகவே இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்கிறது.

முதல் சீன பிராண்டு
இந்தியாவில் நேரடியாக வர்த்தகத்தை துவங்கும் முதல் சீன கார் நிறுவனமாக கிரேட்வால் களமிறங்குகிறது.

வட போச்சே
தமிழகம் மற்றும் குஜராத்தில் முதலில் கார் ஆலை அமைப்பது குறித்து கிரேட் வால் ஆய்வுகளை மேற்கொண்டது.

புனேயில் ஆலை
இறுதியில் மஹாராஷ்டிர அரசு அதிக வரிச்சலுகைகள் மற்றும் இன்னபிற ஒத்துழைப்பு தருவதாக கொடுத்த உறுதிமொழியின் பேரில் தற்போது புனேயில் கார் ஆலையை அமைக்கிறது.

முதலீடு
ரூ.1,676 கோடி முதலீட்டில் புனேயில் புதிய ஆலை அமைக்கிறது கிரேட் வால்.

டெல்லி ஆட்டோ கண்காட்சி
அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது தயாரிப்பை காட்சிப்படுத்தி இந்திய மார்க்கெட்டில் முறைப்படி அடியெடுத்து வைக்க கிரேட் வால் முடிவு செய்துள்ளது.

முதல் கார்
ஹவெல் எச்5 எஸ்யூவியை முதலாவதாக இந்திய மார்க்கெட்டில் களமிறக்க கிரேட் வால் முடிவு செய்துள்ளது.

எஸ்யூவி மட்டுமா?
எஸ்யூவி மட்டுமில்லாமல் பிற ரகத்திலான கார்களையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் கிரேட் வால் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








