போலீசாரை ஏமாற்ற சீட் பெல்ட் படம் போட்ட டீ ஷர்ட்!
கார்களில் டிரைவர் மற்றும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது பெரும்பாலான நாடுகளில் கட்டாய விதிமுறையாக உள்ளது. சீனாவிலும் இந்த விதி அமலில் உள்ளது. ஆனால், சீனாவில் நடைபெறும் விபத்துக்களில் உயிரிழப்புகளுக்கு சீட் பெல்ட் அணியாததும் முக்கிய காரணமாகியுள்ளது.
சீட் பெல்ட் உயிர் காக்கும் கவசம் என்று தெரிந்தும் சீட் பெல்ட் அணியாமல் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், சீட் பெல்ட் அணியாமல் செல்லும்போது போலீசார் தடுத்து நிறுத்தி அபாரதம் விதிப்பதை தவிர்க்க தற்போது நூதன ஐடியோ ஒன்றை அவர்கள் கையிலெடுத்துள்ளனர். அதாவது, சீட் பெல்ட் போன்று கோடு வரையப்பட்ட சீட் பெல்ட் டீ ஷர்ட்டுகளை அணிந்து கொண்டு பயணம் செய்கின்றனர்.

டீ ஷர்ட் விற்பனை அமோகம்
சீனாவில் இதுபோன்ற டீ ஷர்ட்டுகள் எந்த தங்கு தடையுமின்றி ஆன்லைனில் படுஜரூராக வியாபாரம் செய்யப்படுகிறதாம்.

ரொம்ப யூஸ்ஃபுல் மச்சி
இந்த டீ ஷர்ட் ரொம்ப பயனுள்ளதாக இருப்பதாக பல கார் டிரைவர்கள் மற்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

அங்கேயும் இப்படித்தானா
இந்த டீ ஷர்ட்டுகளை தடை செய்ய போலீசார் இதுவரை கண்டுகொள்ளவும் இல்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

உயிருடன் விளையாட்டு
இந்த டீ ஷர்ட்டுகளை பலர் ஒரு புது டிரென்ட்டாக கருதி அணிந்து செல்கின்றனர். உயிரை பற்றி யாரும் அங்கு கவலைப்பட்டதாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








