பஜாஜ் ஆட்டோரிக்ஷாக்களுக்கு நெருக்கடி தரப் போகும் ஸீபீ - தகவல்கள்
பஜாஜ் ஆட்டோரிக்ஷாவுக்கு நெருக்கடி தரும் அம்சங்களுடன் பல்வேறு ஆசிய மார்க்கெட்டுகளில் புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா அறிமுகமாக இருக்கிறது. முதலில் இந்தோனேஷிய மார்க்கெட்டில் ஸ்வீடன் நாட்டு தயாரிப்பான ஸீபீ என்ற அந்த எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா பஜாஜுக்கு நெருக்கடி தர ஆயத்தமாகியுள்ளது.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் அதிக அளவில் பஜாஜ் ஆட்டோரிக்ஷாக்கள் ஓடுகின்றன. இந்த நிலையில், அங்கு நடந்த ஆட்டோ கண்காட்சியில் ஸீபீ எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை அந்நாட்டு ஜனாதிபதி சுஸீலோ பாம்பாங்க் யுதோயுனோ அறிமுகம் செய்தார். இந்த புதிய எலக்ட்ரிக் ரிக்ஷா பஜாஜ் ஆட்டோரிக்ஷாக்களுக்கு நெருக்கடி தரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸீபீ எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்வீடன் பிராண்டு
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த க்ளீன் மோஷன் என்ற நிறுவனம் இந்த ஸீபீ எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை தயாரிக்கிறது.

டிசைன்
இந்த எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

மோட்டார்
பேட்டரியில் இயங்கும் இந்த ஆட்டோரிக்ஷாவில் 4 kW மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ரேஞ்ச்
ஒரு முறை சார்ஜ் செய்யும்போது ஒற்றை பேட்டரி மாடல் 35 கிமீ தூரமும், இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்ட மாடல் 70 கிமீ வரையிலும் செல்லும்.

டாப் ஸ்பீடு
மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

இருக்கை வசதி
இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவின் பின்புறத்தில் 3 பேர் அமர்ந்து பயணிக்க முடியும்.

உற்பத்தி
இந்தோனேஷியாவை சேர்ந்த பிடி லுந்தின் என்ற நிறுவனத்துடன் கூட்டணி வைத்து இந்த எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்களை இந்தோனேஷியாவில் க்ளீன் மோஷன் அசெம்பிள் செய்ய உள்ளது. முதலில் 100 ஸீபீ ஆட்டோரிக்ஷாக்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் உற்பத்தி துவங்க இருக்கிறது.

விலை
இந்த எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவுக்கு இந்திய மதிப்பில் ரூ.4.88 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும்...?
இந்தோனேஷியாவை தொடர்ந்து பிற ஆசிய மார்க்கெட்டுகளிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளதாக க்ளீன் மோஷன் தெரிவித்துள்ளது. எனவே, இந்தியாவிலும் ஸீபீ வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. இருப்பினும், விலைதான் மிரள வைக்கிறது.


Click it and Unblock the Notifications








