காரை சுத்தமா வச்சுகிறதுக்கு வீட்டிலேயே மருந்திருக்கு!!

By Saravana

காரை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளோம். மேலும், சர்வீஸ் சென்டருக்கு சென்று காரை சுத்தப்படுத்துவதற்கு எரிபொருள் செலவு, நேரம் மற்றும் பண விரயம் போன்றவைகளால் எரிச்சலடைய வைக்கிறது.

இந்த நிலையில், அதிக செலவில்லாமல் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து குறைந்த செலவில் காரை சுத்தப்படுத்தும் வழிமுறைகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 ஹேர் கன்டிஷனர்

ஹேர் கன்டிஷனர்

ஒரு சாடியில் முழுவதுமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் தலைக்கு பயன்படுத்தும் ஹேர் கண்டிஷனரை 5 தேக்கரண்டி விடவும். அதனை நன்றாக கலக்கி ஒரு பருத்தி துணியில் இந்த கரைசலை நனைத்துக் கொண்டு காரின் மேற்புறம் முழுவதும் தடவினால் காரின் பளபளப்பு அதிகரிக்கும்.

கோகோ கோலா

கோகோ கோலா

வைன்ட்ஷீல்டு எனப்படும் முன்புற கண்ணாடியில் தூசி தும்பட்டிகள் சுத்தமாக போவதற்கு பருத்தி துணியில் சிறிது கோகோ கோலோவை நனைத்துக் கொண்டு லேசாக தடவிவிடவும். பின்னர், செய்தித் தாள் கொண்டு சுத்தப்படுத்தினால் வைன்ட்ஷீல்டு இப்போது பளீச், பளீச்.

வோட்கா

வோட்கா

4 கப் தண்ணீர், 4 டீ ஸ்பூன் திரவ டிடெர்ஜென்ட் மற்றும் 3 கப் வோட்கா மதுவை கலந்து வைன்ட்ஷீல்டுக்கு தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் கிண்ணத்தில் ஊற்றி வைத்துவிடுங்கள். இப்போது வைப்பரை போட்டு வைன்ட்ஷீல்ட்டை வோட்கா கரைசல் மூலம் துடைத்தால் வைன்ட்ஷீல்டு பளிச்சென இருக்கும்.

பேபி வைப்ஸ்

பேபி வைப்ஸ்

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி வைப்ஸ் எனப்படும் டிஸ்யூ பேப்பர் மூலம் கண்ணாடிகளை துடைத்தால் கீறல் விழாமல் பளிச்சென ஆகிவிடும்.

அம்மோனியம் பவுடர்

அம்மோனியம் பவுடர்

ஒரு கப் தண்ணீரில் கால் கப் வீட்டில் பயன்படுத்தும் அம்மோனியம் பவுடரை கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை பருத்தி துணியில் தொட்டுக் கொண்டு வைப்பர் பிளேடுகளை சுத்தம் செய்யுங்கள். வைப்பர் பிளேடுகளுக்கு மட்டும் பயன்படுத்தவும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

1 கப் வெதுவெதுப்பான தண்ணீருடன், கால் கப் பாத்திரம் கழுவ பயன்படும் டிஷ்வாஷ் லிக்யூடு மற்றும் கால் கப் பேக்கிங் சோடா ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு காலி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இது ரெடிமேட் கார் கிளீனர். உங்களுக்கு எப்போது காரை கழுவ வேண்டுமோ அப்போது, 2 கப் தண்ணீரில் இந்த கரைசலில் சிறிதளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். காரின் மேல் பருத்தி துணியால் தடவிவிட்டு தண்ணீரால் கழுவிவிடுங்கள்.

வினிகர்

வினிகர்

ஒரு பக்கெட் தண்ணீரில் அரை பாட்டில் வினிகர் ஊற்றி நன்கு கலந்து விடுங்கள். ஸ்பான்ச்சில் நனைத்துக் கொண்டு இருக்கைகளில் தடவி சுத்தப்படுத்துங்கள். வினிகரின் மணம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால் காரின் கதவுகளை சிறிது நேரம் திறந்து வைத்து விடுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2013, 9:55 [IST]
English summary
We list out some household items which can be used to wash your car. Be it from vinegar to banking soda these household items come handy.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+