இந்திய பார்முலா - 1 போட்டி: இதுவரை 40,000 டிக்கெட்டுகள் விற்பனை!
டெல்லியில் நாளை மறுதினம் நடைபெற இருக்கும் பார்முலா - 1 கார் பந்தயத்துக்கான டிக்கெட் விற்பனை 40,000 நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் பேர் பார்த்து ரசிக்கும் வசதி கொண்ட புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இந்த ஆண்டு போட்டிக்கான விற்பனை படு மந்தமாக இருந்து வருகிறது.

மேலும், ஆண்டுக்கு ஆண்டு ரசிகர்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. 2011ம் ஆண்டு முதலாவது பார்முலா- 1 பந்தயத்துக்கு 95,000 ரசிகர்கள் வருகை தந்தனர். கடந்த ஆண்டு 65,000 ரசிகர்கள் வந்தனர்.
இந்த நிலையில், போட்டிக்கு இன்னும் ஒரு நாளே மீதமிருக்கும் நிலையில், டிக்கெட் விற்பனை படு மந்தமாக இருந்து வருவது போட்டியை நடத்தும் ஜேபி ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும், போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடைசி கட்டத்தில் விறுவிறுப்படையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பார்முலா- 1 போட்டிகளை நடத்தும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








