சர்வதேச பைக் ராலி பந்தயத்திற்கு செல்லும் முதல் இந்திய வீரர்!
அடுத்த மாதம் 4ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ள வேர்ல்டு கிராஸ் கன்ட்ரி ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பிரபல வீரர் சிஎஸ்.சந்தோஷ் பங்கேற்க உள்ளார். சர்வதேச அளவிலான ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கெடுக்கும் முதல் இந்திய வீரரும் சந்தோஷ்தான். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நெவடாவில் நேவிகேஷன் யுக்திகள் குறித்து டக்கர் ராலி பந்தய சாம்பியன் ஜிம்மி லூயிசிடம் சிறப்பு பயிற்சியும் பெற்று திரும்பியுள்ளார் சிஎஸ்.சந்தோஷ்.
ஏனெனில், ராலி பந்தயங்களில் நேவிகேஷன் பற்றி முழுமையான அறிவும், பயிற்சியும் அவசியம். எனவே, அமெரிக்காவில் பெற்ற பயிற்சி மிக மிக பயனுள்ளதாக இருக்கும் என சந்தோஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வேர்ல்டு கிராஸ் கன்ட்ரி ராலி சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஸ்பான்சர் இல்லாமல் சந்தோஷ் இக்கட்டான நிலையில் உள்ளார். அபுதாபி மற்றும் கத்தாரில் நடைபெற இருக்கும் முதல் இரண்டு போட்டிகளுக்கும் சேர்த்து 35 லட்சம் செலவாகுமாம்.
அபுதாபி ராலி பந்தயத்தில் பங்கேற்பதற்காக இவருக்கு தேசிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கூட்டமைப்பு(எஃப்எம்எஸ்சிஐ) மற்றும் துபாயை சேர்ந்த புரொபைக்ஸ் ஆகியவை ஸ்பான்சர் செய்ய உள்ளன. மீதமுள்ள 4 சுற்றுகளுக்கு ஸ்பான்சர் இல்லாததால் பங்கேற்க இயலாத நிலையில் சிஎஸ்.சந்தோஷ் உள்ளார்.
இவர் சுஸூகி 450 பைக்கை பயன்படுத்த உள்ளார். இந்த பைக்கின் விலை ரூ.7 லட்சம். மேலும், டியூனிங் மற்றும் நேவிகேஷன் சிஸ்டத்தையும் சேர்த்து ரூ.20 லட்சம் வரை செலவு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, மீதமுள்ள போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யுமாறு சிஎஸ்.சந்தோஷ் பெங்களூரில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிஎஸ்.சந்தோஷுக்கு ஸ்பான்சர் செய்ய விரும்புபவர்கள் 0-8105000022 என்ற மொபைல் எண்ணிலோ அல்லது [email protected] என்ற இமெயில் முகவரியிலோ அல்லது http://cssantosh.com/ என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

சிஎஸ்.சந்தோஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு
டி ஹிமாலயா ராலி பந்தயத்தில் வெற்றி பெற்றதற்காக பரிசாக கிடைத்த ஹோண்டா சிஆர்எப் பைக்குடன் சந்தோஷ்.

சிஎஸ்.சந்தோஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சிஎஸ்.சந்தோஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சிஎஸ்.சந்தோஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சிஎஸ்.சந்தோஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சிஎஸ்.சந்தோஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சிஎஸ்.சந்தோஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சிஎஸ்.சந்தோஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சிஎஸ்.சந்தோஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு



Click it and Unblock the Notifications








