செப்டம்பரில் புதிய டஸ்ட்டரை அறிமுகப்படுத்தும் ரெனோ
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் விற்பனையில் இருக்கும் டஸ்ட்டர் எஸ்யூவி கடந்த 2010ல் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக திகழும் டஸ்ட்டரை பின்பற்றி தற்போது ஏராளமான காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே, மார்க்கெட் நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்காக வடிவமைப்பு மற்றும் வசதிகளில் மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டர் மாடலை பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ரெனோவின் துணை பிராண்டான டேஸியா.

ரெனோ அறிக்கை
ரெனோவின் அந்தஸ்தை உயர்த்தும் விதமாக புதிய கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த கான்செப்ட் கார் உருவான விதத்தின் அடிப்படையில் 6 மாடல்களாக காட்சிப்படுத்தப்படும். இது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் என ரெனோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(குறிப்பு: ரெனோ டஸ்ட்டரின் டி கிராஸ் கான்செப்ட் காரின் படங்கள் மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.)

மாற்றம்
புதிய டஸ்ட்டரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால், ரகசிய சோதனைகளின்போது எடுக்கப்பட்ட படங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. புதிய முன்பக்க கிரில், புதிய பம்பர், ஹெட்லைட், டெயில்லைட்டுகளில் மாற்றம், கூடுதல் பிரிமியம் அம்சங்கள் கொண்ட இன்டிரியர் ஆகியவை புதிதாக இருக்கும்.

ஆல் வீல் டிரைவ்
காஸ்மெட்டிக் மாற்றங்கள் தவிர எஞ்சினையும் மேம்படுத்தப்பட்டுள்ளதாம். மேலும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம்
செப்டம்பர் 10ந் தேதி துவங்க இருக்கும் பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் புதிய டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவுக்கு எப்போது?
அடுத்த ஆண்டு துவக்கத்தில் அல்லது மத்தியில் புதிய டஸ்ட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என செய்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








