இங்கிலாந்தில் ஸ்பெஷல் எடிசன் 'மேட் இன் இந்தியா' டஸ்ட்டர் அறிமுகம்!
இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் ரெனோ டஸ்ட்டர் விற்பனையில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டு காலத்தில் உலக அளவில் 1.89 லட்சம் டஸ்ட்டர் எஸ்யூவி கார்கள் விற்பனையாகியுள்ளன.
இந்த நிலையில், இங்கிலாந்தில் ஸ்பெஷல் எடிசன் டஸ்ட்டர் எஸ்யூவியை ரெனோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அங்கு டீசல் பிளாக் எடிசன் என்ற பெயரில் டேஸியா பிராண்டில் டஸ்ட்டர் ஸ்பெஷல் எடிசன் வந்துள்ளது.

மேட் இன் இந்தியா
இங்கிலாந்தில் டேஸியா பிராண்டில் விற்பனை செய்யப்படும் டஸ்ட்டர் சென்னையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

டீசலில் மட்டும்
டஸ்ட்டரின் 110 பிஎச்பி சக்தி கொண்ட 2 வீல் டிரைவ் கொண்ட டீசல் மாடலில் மட்டும் இந்த பிளாக் எடிசன் டஸ்ட்டர் கிடைக்கும்.

வெளிப்புற அம்சங்கள்
கருப்பு நிற வினைல் பினிஷ் கொண்ட வெளிப்புறம்.

18 இஞ்ச் அலாய் வீல்
18 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இன்டிரியர்
லெதர் இன்டிரியர், 6 இஞ்ச் உயர்ரக துல்லியம் கொண்ட திரையுடன் கூடிய கென்வுட் மியூசிக் சிஸ்டம், கார்மின் சேட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம், புளூடூத், ஐபாட் கனெட்டிவிட்டி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை
ரூ.15.94 லட்சம் விலையில் இந்த ஸ்பெஷல் எடிசன் டேஸியா டஸ்ட்டர் கிடைக்கும். சென்னையில் தயாரானாலும், இந்தியாவில் இந்த பிளாக் எடிசன் டஸ்ட்டரை வெளியிடுவது குறித்து ரெனோ எந்த தகவலையும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








