நிசான் டீலர்கள் வழியாக டட்சன் கார்கள் விற்பனை!
நிசான் டீலர்ஷிப்புகள் வழியாகவே டட்சன் கார்களும் விற்பனை செய்யப்படும் என்று டட்சன் சர்வதேச தலைவர் வின்சென்ட் கோபி தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், டட்சன் கார்கள் புதிய டீலர்ஷிப்புகளை அமைத்து விற்பனை செய்யப்படுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.

டட்சன் தலைவர் வின்சென்ட் கோபி இந்த சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளார். நாடு முழுவதும் உள்ள நிசான் டீலர்ஷிப்புகள் வாயிலாகவே டட்சன் பிராண்டு தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டீலர்ஷிப் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்கும் முயற்சிகளை நிசான் மேற்கொண்டுள்ளது.
கோ ஹேட்ச்பேக், கோ ப்ளஸ் எம்பிவி மற்றும் புதிய செடான் கார்கள் டட்சன் பிராண்டில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இவை அனைத்தும் அந்தந்த ரகங்களில் குறைந்த விலை கொண்ட மாடலாக இருக்கும் என்று வின்சென்ட் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








