சென்னையில் டட்சன் கோ கார் சோதனை ஓட்டம்: படங்கள், தகவல்கள்
ரூ.3.5 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படும் டட்சன் கோ கார் தற்போது சென்னை நிசான் - ரெனோ ஆலையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வைத்து சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்த கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்த காரை அப்துல் சுக்கூர் என்ற டீம் பிஎச்பி வாசகர் படம் பிடித்து வெளியிட்டுள்ளார். அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

இடவசதியில் விஞ்சும்
2,450 மிமீ வீல் பேஸ் கொண்டதால் தாராள இடவசதி கொண்டதாக இருக்கும். எனவே, குறைந்த விலை கார்கள் இடநெருக்கடி மிகுந்ததாக இருக்கும் என்ற முத்திரையை டட்சன் கோ உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீலர் போதுமா?
நிசான் டீலர்களிலேயே இடம் ஒதுக்கி டட்சன் கார்கள் தனியாக விற்பனை செய்யப்பட உள்ளன. ஆனால், நிசானிடம் 92 டீலர்கள் மட்டுமே உள்ளதால் இந்த காரின் விற்பனையை சிறப்பாக செய்யுமளவிற்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது பெரிய குறையாக கூறப்படுகிறது.

எஞ்சின்
3 சிலிண்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் டட்சன் கோ கார் வர இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கும். அதிக மைலேஜ் கொடுக்கும் காராகவும் இருக்கும் என்பதால் பலமான வரவேற்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
படங்கள் உதவி: Team BHP

விலை
ரூ.2.99 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் விலையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும், பேஸ் மாடல் ரூ.3.5 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கும் தகவல்களால் இந்த கார் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது.

அறிமுகம்
பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








