முதல்முறையாக டட்சன் கோ காரின் 'லைவ்' படங்கள்!

By Saravana

சென்னை, டெல்லி மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியிருக்கும் டட்சன் கோ கார் நேற்றுமுன்தினம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் டட்சன் காரை அருகே சென்று படம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சியில் டட்சன் காரின் உட்புறத்தையும் படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் நாட்டின் 90 நகரங்களில் டட்சன் காரை இதேபோன்று பொதுமக்கள் பார்வைக்க நிசான் திட்டமிட்டுள்ளது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் டட்சன் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் ஜான் குல்லு கலந்து கொண்டு டட்சன் குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டார். அதுகுறித்து எமது செய்தியாளர் அஜிங்கியா தரும் கூடுதல் தகவல்களையும், டட்சன் காரின் பிரத்யேக படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவையொட்டி இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டட்சன் திட்டமிட்டுள்ளது. அடுத்த கார் குறித்த அறிவிப்பையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டட்சன் வெளியிடுகிறது.

 தனி டீலர்கள்

தனி டீலர்கள்

முதலில் நிசான் ஷோரூம்களிலேயே டட்சன் காரை விற்பனை செய்யப்பட உள்ளன. விற்பனை மற்றும் சர்வீஸ் உள்ளிட்டவற்றில் டட்சன் கார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதைதொடர்ந்து, தனியாக ஷோரூம் அமைத்து டட்சன் பிராண்டு கார்களை விற்பனை செய்யப்பட உள்ளது. டீலர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்பேர் பார்ட்ஸ் விலை

ஸ்பேர் பார்ட்ஸ் விலை

ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் டட்சன் கோ காரின் ஸ்பேர் பார்ட்ஸ் விலை மிக குறைவாக இருக்கும் என்றும், அதேவேளை, போட்டியாளர்களைவிட தரத்திலும் சமரசம் இல்லாத வகையில் இருக்கும் என்று ஜான் குல்லு கூறினார்.

 வாடிக்கையாளர் இலக்கு

வாடிக்கையாளர் இலக்கு

26 வயது முதல் 40 வயது வரையிலான வாடிக்கையாளர்களை குறிவைத்தும், முதல்முறையாக கார் வாங்குபவர்களை இலக்கு வைத்தும் மார்க்கெட்டிங் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

மைக்ரா ஆக்டிவ் காரை விட விலை குறைந்ததாக இருக்கும் என்று ஜான் குல்லு தெரிவித்தார். மேலும், டாப் வேரியண்ட் ரூ.4 லட்சத்திற்குள் இருக்கும் என்பது ஆவலை அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

அராய் அமைப்பின் மைலேஜ் சான்றுக்காக காத்திருப்பதாக ஜான் குல்லு கூறினார்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

1.2 லிட்டர் பெட்ரோல் மாடலில் முதலில் வருகிறது. இதைத்தொடர்ந்து, டீசல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி மாடல்களை அறிமுகம் செய்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

 விற்பனையாளர்கள்

விற்பனையாளர்கள்

பயிற்சி பெற்ற பிரத்யேக விற்பனை பிரதிநிதிகள் டட்சன் கார்களை விற்பனை செய்வதற்கு நியமிகப்படுவர்.

எளிமையான கொள்முதல்

எளிமையான கொள்முதல்

டட்சன் கார் வாங்கும் கொள்முதல் சுழற்சி மிக எளிமையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Article Published On: Monday, December 16, 2013, 10:46 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+