டட்சன் கோ செடான் வெர்ஷனின் மாதிரி படங்கள்
டட்சன் கோ காரின் செடான் வெர்ஷனின் மாதிரி படங்களை வலைப்பூ ஒன்று வெளியிட்டுள்ளது. கடந்த 15ந் தேதி டெல்லியில் நடந்த விழாவில் டட்சன் பிராண்டை நிசான் அறிமுகம் செய்தது. மேலும், அந்த பிராண்டில் வர இருக்கும் புதிய கோ ஹேட்ச்பேக் காரையும் வெளியுலகுக்கு காட்டி பரவசப்படுத்தியது.
அடுத்த ஆண்டு இந்தியாவில் முதலாவதாக விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் பெரும் ஆவலை தூண்டியிருக்கிறது. இந்த நிலையில், டட்சன் கோ அடிப்படையிலான செடான் காரின் மாதிரி படங்களை சிங்கப்பூரை சேர்ந்த தியோஃபிலஸ் சின் என்பவரின் வலைப்பூவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

கோ செடான்
கோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான இந்த புதிய கார் 4 மீட்டர் கொண்டதாக வடிவமைக்கப்படலாம். இதன்மூலம், புதிய காரை வடிவமைப்பதற்கான செலவீனம் வெகுவாக மிச்சப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

போட்டியாளர்கள்
கோ செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டால் மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

ரஷ்ய மார்க்கெட்
இந்த புதிய செடான் கார் இந்தியா தவிர, ரஷ்ய மார்க்கெட்டிலும் விற்பனைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

விலை
கோ ஹேட்ச்பேக் கார் ரூ.4 லட்சம் விலையில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோ செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால் ரூ.5 லட்சம் ஆரம்ப விலை கொண்டதாக இருக்கும்.

புதிய டட்சன் கார்
கோ ஹேட்ச்பேக் கார் கே2 என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டதுபோல, ஐ2 என்ற பெயரில் புதிய ஹேட்ச்பேக் காரை நிசான் வடிவமைத்து வருகிறது.

2 டோர் கோ
கோ ஹேட்ச்பேக் கார் கே2 என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டதுபோல, ஐ2 என்ற பெயரில் புதிய ஹேட்ச்பேக் காரை நிசான் வடிவமைத்து வருகிறது. மேலும், ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றவாறு கோ காரின் 2 டோர் மாடலையும் நிசான் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








