முன்பக்கம் பெஞ்ச் இருக்கையுடன் வரும் டட்சன் கார்!

வரும் 15ந் தேதி டட்சன் பிராண்டு அறிமுக விழா நடைபெறுகிறது. இதில், ஆல்ட்டோவுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வசதிகள் மற்றும் விலையில் வர இருக்கும் புதிய காரை நிசான் விரைவில் பார்வைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கே-2 என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த புதிய காரின் விபரங்கள் மெல்ல இணையதளங்களில் கசியத் துவங்கியிருக்கிறது.

அதில், கே-2 பற்றிய முக்கியமான தகவல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. அதாவது, கே-2 காரின் முன்பக்கம் பெஞ்ச் இருக்கையை கொண்டிருக்கும் என்பதே அந்த தகவல். பழைய அம்பாசடர், பிரிமியர் பத்மினி உள்ளிட்ட கார்கள் பெஞ்ச் இருக்ககைளுடன் வந்தன. அதன்பிறகு, மாறிவரும் எண்ணங்களுக்கு தக்கவாறு தற்போது முன்பக்கம் பக்கெட் இருக்கைகளுடன் கார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஒப்புமை படம்

ஒப்புமை படம்

முன்பக்கத்தில் பெஞ்ச் இருக்கை போடுவதன் மூலம் சிறியவர்கள் அல்லது கூடுதலாக ஒருவர் அமர்ந்து செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், வாடிக்கையாளர்களை கவர முடியும் என்பது நிசான் திட்டம்.

கியர் லிவர்

கியர் லிவர்

மிட்சுபிஷி-நிசான் நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்த குட்டிக் காரான நிசான் டேஸ் என்ற காரில் இருப்பது போன்று, கியர் லிவர் டேஷ்போர்டிலேயே பொருத்தப்பட்டிருக்கும். இதனால், முன்பக்கம் அமர்ந்து செல்பவர்களுக்கு இடைஞ்சல் இருக்காது.

வரவேற்பு பெறுமா?

வரவேற்பு பெறுமா?

நிசான் டட்சன் பிராண்டில் வரும் புதிய கார் அந்த நிறுவனத்தின் கேம் சேஞ்சர் காராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முன்பக்கம் பெஞ்ச் இருக்கை போடப்பட்டிருக்கும் என்பது இந்திய குடும்ப நபர்களின் எண்ணிக்கைக்கு சரியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது வரவேற்பை பெறுமா என்பது பற்றி உங்களது கருத்து என்ன? கருத்துப் பெட்டியில் எழுதுங்கள்.

காரின் மாதிரி படம்

காரின் மாதிரி படம்

டட்சன் பிராண்டில் வர இருக்கும் சிறிய காரின் ஸ்கெட்ச்சை நிசான் வெளியிட்டது.

இணையதளம்

இணையதளம்

டட்சன் பிராண்டுக்கான இணையதளம் இன்றுமுதல் செயல்பட துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 1, 2013, 10:59 [IST]
English summary
We already know, in general, that the new Nissan Micra based Datsun, code named K2, will be ‘modern' and will redefine style and quality in the compact hatchback segment. But it seems its not going to be all modern. To set it apart from the rest the people at Datsun will bring back something, which most of us have forgotten about now. That something is the bench seat in the front row.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+