17ல் டட்சன் பிராண்டில் புதிய கார்: நிசான் அறிவிப்பு
வரும் 17ந் தேதி இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் டட்சன் பிராண்டில் இரண்டாவது புதிய கார் மாடல் அறிமுகமாக உள்ளது.
கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடந்த விழாவில் டட்சன் பிராண்டில் முதலாவது கார் அறிமுகம் செய்யப்பட்டது. கோ என்று பெயரிடப்பட்ட இந்த கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

இந்த நிலையில், ஜகார்த்தாவில் அறிமுகமாகும் புதிய கார் இந்தோனேஷிய மார்க்கெட்டுக்கான பிரத்யேக அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோ காருக்கு அடுத்த டட்சன் பிராண்டில் வரும் இரண்டாவது கார் மாடலாக இருக்கும்.
இந்த கார் நவீன தலைமுறை அம்சங்களுடன் ஸ்டைலான காராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷிய நிலவரங்களுக்கு தக்கவாறு அந்நாட்டிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும்.
இந்திய மதிப்பில் ரூ.5.95 லட்சம் விலையில் அந்த புதிய கார் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








