பென்ஸ் ஏ கிளாஸுக்கு மேட் பினிஷ் கொடுத்த டிசி டிசைன்

பென்ஸ் ஏ கிளாஸ் காருக்கு மேட் பினிஷ் கொடுத்து வனப்பை கூட்டியிருக்கிறது டிசி டிசைன். ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் எலன்ட்ராவை தொடர்ந்து பென்ஸ் ஏ கிளாஸ் காரை டிசி வெளியிட்டு இருக்கிறது.

ரெனோ டஸ்ட்டரை போன்றே கருப்பு, அடர் சாம்பல் நிறத்திலான மேட் பினிஷ் வெளிப்புறத்தில் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் வெள்ளை நிற பென்ஸ் கார்களை பார்த்து அலுத்துப் போன கண்களுக்கு இந்த மேட் பினிஷ் செய்யப்பட்ட ஏ கிளாஸ்ம் நிச்சயம் கவர்வதாகவே இருக்கிறது.

படம் மட்டும்தான்...

படம் மட்டும்தான்...

பென்ஸ் ஏ கிளாஸ் குறித்த தகவல்களை வெளியிடாமல் படங்களை மட்டும் டிசி வெளியிட்டு இருக்கிறது.

வெளிப்புறத்தில் மாற்றம்

வெளிப்புறத்தில் மாற்றம்

இன்டிரியர் படங்களை டிசி வெளியிடாததால், வெளிப்புறத்தில் மட்டும் மேட் பினிஷிங் செய்துள்ளது உறுதியாகிறது.

ஸ்போர்ட்டி லுக்

ஸ்போர்ட்டி லுக்

மேட் பினிஷ் செய்யப்பட்ட பென்ஸ் ஏ கிளாஸ் சற்று ஸ்போர்ட்டியான தோற்றத்தை பெற்றுள்ளது.

லோகோவை காணோம்

லோகோவை காணோம்

முகப்பில் பளிச்சென தெரியும் பென்ஸின் நட்சத்திர சின்னம் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டதால் சட்டென கண்களில் தோன்ற மறுக்கிறது.

ஜுவெல் எஃபெக்ட்

ஜுவெல் எஃபெக்ட்

பென்ஸ் ஏ கிளாஸ் காரின் கிரில்லில் வைரத்தை போன்று ஜொலிக்கும் 302 அலங்காரப் பொருள் பதிக்கப்பட்டிருக்கிறது.

அலாய் வீல்

அலாய் வீல்

5 ஸ்போக் அலாய் வீல்களும், லோ புரோஃபைல் எனப்படும் தட்டையான டயர்களும் வெளிப்புற வடிவமைப்பை தூக்கி நிறுத்துகின்றன. இதுதவிர, ஏர் டேக் மற்றும் ரியர் ஸ்ராட்ச் கார்டு ஆகியவை சிவப்பு வண்ணத்தில் மேலேழும்பி நிற்கின்றன.

2 மாடல்களுக்கும்

2 மாடல்களுக்கும்

பென்ஸ் ஏ கிளாஸ் காரை வைத்திருப்பவர்கள் தங்களது காருக்கு கூடுதல் கவர்ச்சி தேவைப்பட்டால் சென்னையிலுள்ள டிசி ஷோரூமை அணுகலாம்.

 விலை

விலை

பென்ஸ் ஏ கிளாஸ் காரின் பெட்ரோல் மாடல் ரூ.21.73 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.22.73 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2013, 18:00 [IST]
English summary
There latest work is based on a car higher up the order. A Mercedes Benz A Class. We are not sure if its a deliberate decision on DC's part, but once again the modified A Class features a black/dark grey body paint, like the Duster and Elantra. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+