டிசி கைவண்ணத்தில் உருவான ஹூண்டாய் எலன்ட்ரா

கார்களை கஸ்டமைஸ் செய்து தருவதில் இந்தியாவின் மிகப் பிரபலமான நிறுவனமாக டிசி டிசைன்ஸ் திகழ்கிறது. டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ரெனோ டஸ்ட்டர், நிசான் சன்னியை தொடர்ந்து தற்போது ஹூண்டாய் எலன்ட்ரா காருக்கு தனது கைவண்ணத்தை கொடுத்து அசத்தியிருக்கிறது டிசி டிசைன் நிறுவனம்.

புளூயிடிக் டிசைனில் வாடிக்கையாளர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட ஹூண்டாய் எலன்ட்ரா தற்போது டிசியின் கஸ்டமைஸ் வேலைப்பாடுகளால் புதிய அவதாரம் எடுத்துள்ளது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் கூடுதல் வசதிகள் மற்றும் தோற்றத்தில் பல மாறுதல்களுடன் கண்ணை கவரும் புதிய ஹூண்டாய் எலன்ட்ரா காரின் படங்களையும், தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

முகப்பு மாற்றம்

முகப்பு மாற்றம்

அசத்தலான முகப்பு கிரில், கூடுதல் ஏர்டேக், கிரில் நடுப்பகுதியில் டிசி லோகோ, பனி விளக்குகள் ஆகியவற்றுடன் கருப்பு வண்ணத்தில் சிவப்பு கோடுகள் இழையோடுகின்றன.

எக்ஸ்டீரியர்

எக்ஸ்டீரியர்

வெளிப்புறத்தில் கருப்பு ஆதிக்கத்தை அடக்கும் விதமாக சிறிய சிவப்பு கோடுகளும் வளையங்களும் கொட்டமிடுகின்றன.

 டூயல் டோன் இன்டிரியர்

டூயல் டோன் இன்டிரியர்

கதவை திறந்து உள்ளே நுழைந்தால் இது என் ஏரியா என்கிறது சிவப்பு நிற இன்டிரியர். இருக்கைகள், டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல், கதவுகள் என அனைத்திலும் சிவப்பு நிறத்தில் சிலிர்க்க வைக்கிறது. போனா போகிறது என்று கருப்பு நிறத்துக்கும் ஆங்காங்கே முக்கியத்துவம் தெரிகிறது.

 பின் இருக்கை

பின் இருக்கை

நிசான் சன்னி உள்ளிட்ட கார்களில் பார்த்தது போன்றே லெதர் இருக்கைகளை கொண்டிருக்கின்றன. ஆனால், சாய்மானம் வசதி கொண்ட இருக்கைகள் இல்லாவிட்டாலும், சொகுசாக இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளது டிசி.

 சில் பிளேட்

சில் பிளேட்

ரப்பரால் ஆனது போன்ற சில் பிளேட்டுகள்.

மல்டி ஸ்போக் அலாய் வீல்

மல்டி ஸ்போக் அலாய் வீல்

இந்த காரில் மல்டி ஸ்போக் அலாய் வீல் பொருத்தப்பட்டிருப்பது பிரத்யேக அம்சமாக கூறலாம். நடுவில் டிசி லோகோவும் இடம்பெற்றுள்ளது.

 மேட் பினிஷ்

மேட் பினிஷ்

மேட் பினிஷ் செய்யப்பட்டிருப்பதால் காரின் தோற்றத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

கூடுதல் வசதி?

கூடுதல் வசதி?

பிற கார்களின் இன்டிரியரில் கூடுதல் வசதிகள் கொண்டதாக டிசி மாற்றியிருக்கும். ஆனால், இந்த காரில் இன்டிரியரில் வண்ணத்தை மட்டுமே மாற்றியுள்ளது.

 பக்கெட் இருக்கை

பக்கெட் இருக்கை

முன்புற இருக்கைகள் சொகுசான பயணத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பின்புற தோற்றம்

பின்புற தோற்றம்

பின்புறத்தில் பம்பரில் மட்டுமே அதிக மாற்றங்களை செய்துள்ளது டிசி. இரட்டை புகைபோக்கிகள், ஹனிகோம்ப் கிரில் என பின்புறத்திலும் தனது கைவண்ணத்தை காட்டியிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 11, 2013, 11:58 [IST]
English summary
After Nissan Sunny and Renault Duster India's best known auto design house has turned its attention to Hyundai Elantra. The DC Chabria led tuning firm has this time applied less effort on the interior and slightly more on the exterior.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+