2 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தும் டிசி டிசைன்ஸ்!
அவந்தி சூப்பர் காரைத் தொடர்ந்து 2 புதிய கார் மாடல்களை டிசி டிசைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
கார்களை உருமாற்றித் தருவதில் பிரபலமாக திகழும் டிசி டிசைன்ஸ் நிறுவனம் கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிசி அவந்தி என்ற ஸ்போர்ட்ஸ் கார் மாடலை அறிமுகம் செய்தது.

மார்க்கெட்டில் மிக குறைவான விலை கொண்டதாக வரும் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் விரைவில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இந்த நிலையில், மேலும் 2 புதிய கார் மாடல்களை சொந்த தயாரிப்பில் உருவாக்கி அறிமுகம் செய்கிறது டிசி டிசைன்ஸ்.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இதுதுகுறித்து டிசி டிசைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திலீப் சாப்ரியா கூறுகையில்," டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல் 25 அவந்தி சூப்பர் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
அறிமுக சலுகையாக ரூ.25 லட்சம் விலையில் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார்களை விற்பனைக்கு விடுகிறோம். இதைத்தொடர்ந்து, ரூ.30 லட்சம் விலையில் டிசி அவந்தி கார் விற்பனை செய்யப்படும்.
இதுதவிர, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய எஸ்யூவி மாடலையும், புதிய குட்டிக் காரையும் அறிமுகம் செய்ய உள்ளோம். புதிய எஸ்யூவி 4 பேர் பயணிக்கக் கூடியதாகவும், கன்வெர்ட்டிபிள் ரகத்திலும் இருக்கும். இதுபோன்று இரண்டாவது மாடலான குட்டிக் கார் நானோவைவிட சிறியதாக இருக்கும்.
இந்த கார்கள் இளைஞர்களை பெரிதும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்," என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








