டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் அவதாரம் எடுத்த நிசான் எவாலியா
கார்களை கூடுதல் வசதிகளுடன் மாற்றுவதில் கைதேர்ந்த டிசி டிசைன் நிறுவனம் தற்போது நிசான் எவாலியாவை தனது கைவண்ணத்தில் மாற்றியுள்ளது.
ஆடம்பர கார் போன்று உட்புறம் மாற்றப்பட்டிருக்கும் இந்த புதிய எவாலியா டிசி டிசைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் விதத்தில் இருக்கிறது. உருமாறிய எவாலியாவின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

இன்டிரியர்
சிவப்பு, பீஜ் நிற கலவையில் இன்டிரியர் கொடுக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, முன்புற கதவு வரை இந்த இரட்டை வண்ணக் கலவை ஆக்கிரமித்துள்ளது. அதேவேளை, அது பின்புறம் வராமல் இருந்தது விசேஷம். இல்லையெனில், கனக் கொடூரமாக இருந்திருக்கும்.

கேப்டன் இருக்கைகள்
நடுவரிசை மற்றும் மூன்றாவது இருக்கைகளை எடுத்துவிட்டு 4 கேப்டன் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தலா இரண்டு இருக்கைகள் எதிரெதிர் திசையில் இருக்கமாறு அமைக்கப்பட்டுள்ளன.

விளக்குகள்
இரவில் பயணம் செய்யும்போது கண்களை உருத்தாத வகையில் கதவுகளில் மெல்லிய ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

டிசியின் சின்னம்
காரின் உட்புறத்தில் கதவுகளில் டிசியின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, டிவி திரை உள்ளிட்டவற்றையும் ஆர்டரின் பேரில் பொருத்தி தருகிறது.

சொகுசு
மொத்தத்தில் 6 பேர் செல்வதற்கான வசதியுடன் எவாலியாவை மாற்றியுள்ளது டிசி. மேலும், அடிக்கடி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

விலை
புதிய எவாலியாவை டிசியிடம் கொடுத்துவிட்டு ரூ.3.95 லட்சத்தை கொடுத்தால் இதுபோன்று மாற்றிக் கொள்ளலாம்.

நிசான் எவாலியா
டிசி.,யிடம் போவதற்கு முன் எவாலியா வாங்க வேண்டுமா? - அந்த காரை பத்தின எல்லா விஷயங்கள், வேரியண்ட்டுகளில் இருக்கும் அம்சங்கள், அதன் ஒப்பீடுகளை தெரிந்து கொள்ள அங்கே இங்கே அலைய வேண்டாம். இப்படி உள்ளே வந்தால் அனைத்தும் உங்கள் விரல் நுனியில்...!!


Click it and Unblock the Notifications








