சொர்க்கலோகத்தை கண்முன் கொண்டு வந்த டிசி டிசைனின் புதிய பஸ்
கார்கள் மற்றும் வாகனங்களை ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்து தருவதில் கேதேர்ந்த டிசி நிறுவனம் தற்போது மினி சொகுசு பஸ் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இசூஸு 4500 டிரக்கின் சேஸ் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நடமாடும் ஆடம்பர மினி பங்களாவில் சொர்க்கத்தை நினைவூட்டும் வசதிகளை கொடுத்து அசத்தியிருக்கிறது டிசி.
லிவிங் ரூம், பெட்ரூம், கேண்டீன் மற்றும் டாய்லெட், பாத்ரூம் ஆகிய அனைத்து வசதிகளும் இந்த நடமாடும் ஆடம்பர பங்களாவில் இருக்கிறது. மேலும், உட்புறத்தில் அதிர்வுகள் தெரியாதவாறு இதில் பிரத்யேக சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.
முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த பஸ்சில் வெளியிலிருந்து அதிக சப்தம் வராத வகையில் விசேஷ சப்த தடுப்பு நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. மனதை மயக்கும் விளக்குகள், டிவி, கிங் சைஸ் நாற்காலிகள் என அனைத்து வசதிகளும் கொண்ட இந்த பஸ்சுக்கு தற்போது முன்பதிவு துவங்கப்பட்டிருக்கிறது.

சொர்க்கம் எங்கே... அது இங்கே...!!

சொர்க்கம் எங்கே... அது இங்கே...!!

சொர்க்கம் எங்கே... அது இங்கே...!!

சொர்க்கம் எங்கே... அது இங்கே...!!

சொர்க்கம் எங்கே... அது இங்கே...!!

சொர்க்கம் எங்கே... அது இங்கே...!!



Click it and Unblock the Notifications








