மஹிந்திரா யூஸ்டு கார் டீலரில் மோசடி: யூஸ்டு கார் வாங்கும்போது உஷார்!

By Saravana
Mahindra First Choice Showroom
டெல்லியை சேர்ந்த மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் யூஸ்டு கார் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர் மோசடி புகாரில் சிக்கி கைதாகியுள்ளார். அவரிடம் வாங்கிய கார்களை போலீசார் பறிமுதல் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் செயல்பட்டு வந்த ஜேகே மோட்டார் கார்ப்ஸ் மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இவர் கார்களை வாங்குவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நிதிநிறுவனத்திடம் கடன் வாங்கியிருக்கிறார். அதற்கு ஈடாக கார்களின் ஒரிஜினல் ஆவணங்கள் அந்த நிதி நிறுவனத்திடம் இருந்துள்ளது.

இந்த நிலையில், வாங்கிய கார்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் கார்களை விற்று வந்துள்ளது ஜேகே மோட்டார் கார்ப்ஸ். இதையடுத்து, நிதி நிறுவனம் சார்பில் புகாரின் பேரில் வழக்கப் பதிவு செய்து ஜேகே மோட்டார் கார்ப்ஸ் நிர்வாக இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், டீலர் சார்பில் விற்பனை செய்யப்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்களை சரண்டர் செய்யுமாறு போலீசார் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். சில கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

நம்பிக்கைகுரிய பிரபல நிறுவனத்தின் டீலரே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது கார் வாங்கிய வாடிக்கையாளர்களை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே, யூஸ்டு கார் வாங்கும்போது காரின் ஒரிஜினல் ஆவணங்களை சரிபார்ப்பதோடு, கையோடு வாங்கி விடுவது நல்லது. இல்லையெனில் இதுபோன்ற சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஆபத்து நிறையவே இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 6, 2013, 16:29 [IST]
English summary
The Times of India, Delhi edition has reported on a shocking incident of fraud from an authorized Mahindra First Choice Dealer. According to the story, customers who picked up Skodas, BMWs, Hondas, Volkswagens and other cars from J K Motor Corps, a Mahindra First Choice franchisee, have had to surrender their cars to the police.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+