செப்டம்பரில் கார்கள் மீதான தள்ளுபடி சலுகைகள் விபரம்!!

By Saravana

பண்டிகை காலம் துவங்கிவிட்டாலே கார்கள் மீது சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு விற்பனை மோசமாக இருப்பதால், பல கார் மாடல்களுக்கு தொடர்ந்து தள்ளுபடிகள் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

செப்டம்பரில் கார்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் விபரங்களை தயாரிப்பாளர் வரிசைப்படி ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

டொயோட்டா

டொயோட்டா

எட்டியோஸ் காருக்கு ரூ.21,000 மதிப்புக்கு இன்ஸ்யூரன்ஸ் வழங்கப்படுகிறது. இன்னோவாவுக்கு ரூ.15,000 தள்ளுபடியும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்கப்படுகிறது. புதிய இன்னோவா வருகையால் சலுகையின் அளவு விரைவில் கூட்டப்படும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும், டீலரில் நீங்கள் கூடுதல் சலுகைகளை கேட்டும் வாங்க முடியும்.

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் பெட்ரோல் காருக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் சலுகைகளை பெற முடியும். 3 சீரிஸ் டீசல் மாடலுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரையில் பெற முடியும். 5 சீரிஸ் டீசல் மாடலுக்கு ரூ.6 லட்சம் வரை சலுகைகள் தரப்படுகிறது. எக்ஸ்1 எஸ்யூவி காருக்கு ரூ.4.5 லட்சம் வரையில் தள்ளுபடி தரப்படுகிறது.

மஹிந்திரா

மஹிந்திரா

பொலிரோ எஸ்யூவிக்கு ரூ.20,000, ஸ்கார்ப்பியோவுக்கு ரூ.40,000, குவான்ட்டோவுக்கு ரூ.44,000 நேரடி தள்ளுபடியாக பெற முடியும்.

 ஆடி

ஆடி

ஏ4 செடான் காருக்கு வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது. ஏ6 காருக்கு ரூ.5 லட்சம் வரை அதிகபட்சமாக பெறலாம்.

ஃபோர்டு

ஃபோர்டு

ஃபிகோ காருக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் உள்பட ரூ.37,000 வரை தள்ளுபடியை பெற முடியும். ஃபியஸ்ட்டா செடானுக்கு ரூ.1.12 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. என்டெவருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ்

சிட்டி காருக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் கூடுதலாக ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிரியோவுக்கு ரூ.19,000 மதிப்புக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ரூ.10,000 தள்ளுபடியை பெறலாம்.

ஹூண்டாய்

ஹூண்டாய்

ஹூண்டாய் எலன்ட்ராவின் பெட்ரோல் மற்றும் டீசல் காருக்கு ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.20,000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும், ரூ.20,000 நேரடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

செவர்லே

செவர்லே

செயில் யுவா ஹேட்ச்பேக் காருக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்டாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் கிடைக்கும். மொத்தத்தில் ரூ.33,000 வரை சேமிப்பு சலுகைகளை பெறலாம். செயில் செடான் காருக்கு ரூ.5,000 விலையில் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெறலாம்.

மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி

மாருதி வேகன் ஆர் காருக்கு ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.35,000 நேரடி பண தள்ளுபடி மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் சலுகை உள்பட மொத்தமாக ரூ.68,000 வரை சேமிப்பு சலுகைகளை பெறலாம். உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கும் மாருதி எஸ்டீலோ காருக்கு ரூ.68,000 வரை சேமிப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இந்த செய்தித் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை அணுகவும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 2, 2013, 10:24 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+