ஃபெராரி நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு
புகழ்பெற்ற ஃபெராரி கார் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உலகின் முன்னணி பல்கலைகழகங்களில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் மற்றும் எலக்ட்ரானிக் எஞ்சினியரிங் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களாவர்.
மேலும், கடந்த ஓர் ஆண்டுக்குள் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆங்கில மொழி புலமை அவசியம். கல்வித் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் முதல் கட்டமாக ஆங்கில மொழி புலமை மற்றும் மனநலம் தொடர்பாக ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வில் வெற்றிபெற வேண்டும்.
இதற்கடுத்து, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும். வரும் 17ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இத்தாலியிலுள்ள மரனெல்லோ ஆலையிலும், விற்பனைக்கு பிந்தைய சேவை பிரிவுகளிலும் பணியமர்த்தப்படுவர்.

ஃபெராரி மரனெல்லோ ஆலை

ஃபெராரி மரனெல்லோ ஆலை

ஃபெராரி மரனெல்லோ ஆலை

ஃபெராரி மரனெல்லோ ஆலை

ஃபெராரி மரனெல்லோ ஆலை



Click it and Unblock the Notifications








