400 கிமீ வேகத்தில் தீப்பிடித்து வெடித்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீரர்!
மேலைநாடுகளில் டிராக் ரேஸ் எனப்படும் கார் பந்தயங்கள் மிகப்பிரபலம். பந்தய களத்தில் சீறிப் பாயும் டிராக் ரேஸ் கார்களை கண்டு ரசிப்பதற்கு மேலைநாட்டு மக்களிடையே அப்படியொரு வரவேற்பு இருந்து வருகிறது. அதேவேளை, டிராக் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது.
எத்தனை பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் எந்த நேரத்திலும் விபத்து நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதேபோன்று, சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த டிராக் ரேஸில் சீறிப்பாய்ந்து சென்ற கார் ஒன்று திடீரென எஞ்சினில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. ஆனால், இந்த விபத்தில் காரை ஓட்டிய வீரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அனுபவமிக்க வீரர்
விபத்தில் சிக்கிய காரை ஓட்டிய அன்ட்ரான் பிரவுன் அனுபவமிக்க டிராக் ரேஸ் வீரராக கூறப்படுகிறார். கலிபோர்னியாவிலுள்ள பொமானா என்ற இடத்தில் நடந்த இந்த தேசிய ஹாட் ராட் அசோசியேஷன் டிராக் ரேஸிங் பந்தயத்தில் காரை ஓட்டியபோதுதான் இவர் விபத்தில் சிக்கினார்.

சாம்பியன்
ஆப்பிரிக்க வம்சாவளி வீரரான பிரவுன் கடந்த ஆண்டு நடந்த இதே போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்.

எஞ்சின் பவர்
இந்த பந்தயத்தில் பிரவுன் ஓட்டிய கார் 8000 பிஎச்பி ஆற்றல் கொண்டது.

விறுவிறுப்பு
இரண்டாவது இறுதிச் சுற்றில் நாக் அவுட் பந்தயத்தில் எல்லைக் கோட்டை தாண்டுவதற்கான பிரவுன் 418 கிமீ வேகத்தில் காரை செலுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எஞ்சினில் தீப்பிடித்துள்ளது.

உயிர் தப்பிய அதிசயம்
கார் முழுவதும் தீப்பற்றிய நிலையில், காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து எப்படியோ வெளியேறிவிட்டார் பிரவுன். அதுவும் பெரிய காயங்கள் எதுவும் இல்லாமல்.

தீத்தடுப்பு உடைகள்
பொதுவாக கார் பந்தய வீரர்கள் இதுபோன்று விபத்துக்களில் சிக்கும் ஆபத்து இருப்பதால் தீத்தடுப்பு உடைகளை அணிவது வழக்கம். அதுவே, பிரவுனையும் காப்பாற்றி இருக்கிறது.

லைட் வெயிட் பாடி
எஞ்சின் அதிக சூடாவதும், டிராக் ரேஸ் கார்கள் இலகு எடை கொண்ட பாகங்களால் வடிவமைக்கப்படுதும் அவை எளிதில் தீப்பிடிக்க காரணமாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








