புதிய கார் பற்றிய A to Z விபரங்களை பெறுவதற்கான வசதி
ஆட்டோமொபைல் துறை நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்களையும் அன்றாடம் வழங்கி வரும் டிரைவ்ஸ்பார்க் தளத்தில் புதிய கார்கள் பற்றிய தகவல்களை அனைத்தையும் பெறும் வகையில் புதிய கார் விபரப் பிரிவு புதுப்பொலிவுடன், கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் வாரியாகவும், ஹேட்ச்பேக், செடான் என ரக வாரியாகவும் உங்கள் விருப்பத்திற்குரிய கார் மாடலின் விபரங்களை மிக எளிதாகவும், விரைவாகவும் பெறும் வகையில் இந்த புதிய பக்கங்களை வடிவமைத்துள்ளோம். New cars என்ற லிங்கை சொடுக்கினால் இந்த வசதிகளை நீங்கள் பெறலாம்.
கார் வாங்க செல்வதற்கு முன் அதிலிருக்கும் வசதிகள், எஞ்சின் மற்றும் விலை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்வதோடு மட்டுமின்றி, பிற கார் மாடல்களுடன் எளிதாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும்(car comparison) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், உங்கள் அருகாமையில் இருக்கும் கார் டீலரை பற்றி தெரிந்து கொள்வதற்கும் Dealer locator வசதி இருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் புதிய கார் பற்றிய A to Z விபரங்களை அணு அணுவாக தெரிந்துகொள்ளும் வகையில் இந்த புதிய பக்கங்களை வடிவமைத்துள்ளோம். தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வசதிகள் விரைவில் தமிழிலும் வெளியிட உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புதிய கார் பகுதியின் பக்கங்கள் குறித்து தங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்குமாறு வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.
புதிய கார் விபரப் பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications








