டஸ்ட்டரின் அழகுக்கு அழகு சேர்த்த சிறப்பு அணிகலன்கள்!

By Saravana

கஸ்டமைஸ் செய்யும்போது காருக்கு தனி அழகு கிடைப்பது உண்மை. நம்மூர் நகரங்களில் பழகி விட்ட டஸ்ட்டரை பத்தோடு பதினொன்றாக இல்லாமல், தங்களது காரை வேறுப்படுத்திக் காட்டுவதற்காக லட்சங்களை கொட்ட சிலர் தவறுவதில்லை.

இந்த நிலையில், ஜெர்மனியை சேர்ந்த உரிமையாளர் ஒருவர் டேஸியா டஸ்ட்டரை தன் விருப்பம்போல் கஸ்டமைஸ் செய்து அசத்தியுள்ளார். மிகச் சிறப்பான அணிகலன்களை தேர்வு செய்து டஸ்ட்டரை மாற்றியுள்ளார். இதனால், டஸ்ட்டரின் கம்பீரம் பல படிகள் முன்னேறியுள்ளது. அதனை ஸ்லைடரில் காணலாம்.

வீல்கள்

வீல்கள்

உங்களுடைய டஸ்ட்டருக்கு சிறப்பு அணிகலன் சேர்க்க விரும்பும்போது, முதலாவதாக சக்கரங்களிலிருந்து தொடங்கலாம். படத்தில் இருக்கும் இந்த டஸ்ட்டரில் 20 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தோற்றம்

தோற்றம்

இரட்டை வண்ண பெயிண்ட் ஷேட், எல்இடி விளக்குகள், எஞ்சின் கார்டு என டஸ்ட்டருக்கு கூடுதல் அழகை தருகிறது.

 பின்புறம்

பின்புறம்

பின்புறத்தை இதைவிட சிறப்பாக டஸ்ட்டரை மாற்ற இயலாது எனும் வகையில், எல்இடி டெயில் லைட்டுகள், புதிய பம்பர், குரோம் பிளேட் மற்றும் டியூவல் புகைப் போக்கி குழாய்கள் என மிக அசத்தலாக மாற்றியிருக்கிறார்.

டாப் என்ட்

டாப் என்ட்

படத்தில் காணும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட டஸ்ட்டர் 110 பிஎஸ் எஞ்சின் கொண்ட டாப் என்ட் மாடல். இந்த காரின் உயரத்தையும் உரிமையாளர் கூட்டியிருக்கிறார்.

வீடியோ

டஸ்ட்டரின் வெளிப்புறத் தோற்றத்தில் மட்டுமல்ல, உட்புறத்திலும் இரட்டை வண்ணக் கலவை பயன்படுத்தி அவர் மாற்றியுள்ள விபரங்கள், கூடுதல் குரோம் பூசப்பட்ட ஆக்சஸெரீஸ்கள் குறித்து அவரே விளக்குகிறார்.

More from DriveSpark

Article Published On: Monday, November 11, 2013, 10:23 [IST]
English summary
You get an idea about the popularity of the Duster in India when you see the number of these compact SUVs roaming the streets of our cities. For some Duster owners this is actually undesirable. Particularly for those who cannot stand their car being exactly the same as hundreds of others.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+