ஆல்ட்டோவை சாய்க்கணும்... டஸ்ட்டர் டிசைனர் கையில் பொறுப்பை ஒப்படைத்த ரெனோ!

குறிப்பாக இந்திய மார்க்கெட்டை குறி வைத்து சிறிய கார் மாடல்களை இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க உள்ளன. இதில், ஒன்று நானோவுக்கு போட்டியாக 3,900 டாலர் விலையிலும், மற்றொன்று ஆல்ட்டோவுக்கு போட்டியாக 6,400 டாலர் விலையி்லும் அறிமுகப்படுத்த ரெனோ திட்டமிட்டுள்ளது.
இந்த கார்களை வடிவமைக்கும் பொறுப்பை டேஸியா டஸ்ட்டர் எஸ்யூவி டிசைன் டீமுக்கு தலைமை வகித்த ஜெரார்டு டெட்டூர்பெட் வசம் ரெனோ ஒப்படைத்துள்ளது.
இந்த புதிய கார்களின் வடிவமைப்பு பணிகளுக்கான தற்போது ஜெரார்டு டெட்டூர்பெட் சென்னையில் தங்கியிருக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் வரை அவர் இங்கு தங்கியிருந்து பணிகளை முடித்துக் கொடுக்க இருக்கிறார்.
ஏ-என்ட்ரி மற்றும் சப் என்ட்ரி என்ற குறியீட்டு பெயர்களில் இந்த இரு கார் மாடல்களும் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய கார்களுக்கு 800சிசி எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாக ரெனோ- நிசான் கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








