லிமோசின் கார் வாடகைக்கு... 4 மணிநேரத்துக்கு ரூ.51,000 கட்டணம்!!
நாட்டின் பிரபலமான வாடகை கார் நிறுவனமான ஈக்கோ ரென்ட் ஏ கார் நிறுவனம் லிமோசின் கார்களை வாடகைக்கு அறிமுகம் செய்துள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் இந்த கார்கள் வாடகைக்கு கிடைக்கும்.
இந்த கார்கள் கோடீஸ்வர திருமண விழாக்களில் பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வசதிகளுடன் கிடைக்கும். இந்த கார்களுக்கு தற்போது ஆர்டர்கள் குவிந்து வருவதாக இந்த நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் லூம்பா கூறியிருக்கிறார். மேலும், வாடிக்காயாளர்களின் தேவைக்கேற்ப ஒயின், மலர்கள், பலூன்கள் ஆகியவற்றுடன் இந்த கார் வாடகைக்கு கிடைக்கும்.
அலங்கரிக்கப்பட்ட லிமோசின் காருக்கு 4 மணிநேரத்துக்கு ரூ.51,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் அல்லது 10 கிமீ.,க்கு ரூ.6,000 கட்டணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண விசேஷங்களில் இந்த கார் முக்கிய இடத்தை பிடிக்கும் எனவும் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிறிஸ்லர் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கார் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

கிறிஸ்லர் லிமோசின் கார்

கிறிஸ்லர் லிமோசின் கார்

கிறிஸ்லர் லிமோசின் கார்

கிறிஸ்லர் லிமோசின் கார்

கிறிஸ்லர் லிமோசின் கார்

கிறிஸ்லர் லிமோசின் கார்



Click it and Unblock the Notifications








