எலக்ட்ரிக் கார்களுக்கு மானியம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

By Saravana
Mahindra Reva
எலக்ட்ரிக் கார் விற்பனையை ஊக்குவிப்பதற்கு மானியம் வழங்குவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், பட்ஜெட்டுக்கு பின் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனங்களின் கார்பன் புகையால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக எலக்ட்ரிக் கார் விற்பனையை ஊக்குவிக்க மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது.

இந்த நிலையில், மானியம் திட்ட ஒதுக்கீடு காலம் முடிவடைந்ததால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அறவே நின்றுவிட்டது. இந்த நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக பல முக்கிய திட்டங்களை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

வரும் பட்ஜெட்டில் எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2013-14ம் ஆண்டு நிதி ஆண்டில் மானியம் வழங்குவதற்காக ரூ.350 கோடி முதல் ரூ.500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், அடியோடு முடங்கியிருக்கும் எலக்ட்ரிக் கார் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை மீண்டும் உயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, January 7, 2013, 10:21 [IST]
English summary
The Indian government is said to have plans to encourage the use of electric vehicles in India. According to reports the government wants to mimic some of the policies undertaken by European governments where both manufacturers and buyers of electric vehicles are encouraged. This is considered as an eco-friendly measure as electric vehicles do not have carbon emissions.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+