ஜெனீவாவில் பார்வையாளர்களை கவர்ந்த ஃபெராரியின் புதிய சூப்பர் கார்
ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது ஃபெராரியின் புதிய ஹைப்பர் காரான லாஃபெராரி. ஜெனீவா போனால் மறக்காமல் பார்த்து விட்டு வாருங்கள் என்று சொல்லும் அளவிற்கு தனது பிரத்யேக டிசைனால் கவர்ந்து வருகிறது இந்த புதிய ஹைப்பர் கார்.
ஃபெராரியின் என்ஸோ ஹைப்பர் காரின் அடுத்த தலைமுறை மாற்று காராக இது அறிமுகமாகியிருக்கிறது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இந்த புதிய கார் தற்போது எஃப்150 என்ற குறியீட்டு பெயரில்இதுவரை அழைக்கப்பட்டு வந்தது. இந்த பெயருக்கு சொந்தம் கொண்டாடி ஃபோர்டு போட்ட வழக்கு காரணமாக இந்த காரின் பெயரை லாஃபெராரி என்று மாற்றப்பட்டிருக்கிறது.
ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட இந்த காரில் 6.3 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 163 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டாரும் இருக்கிறது. மொத்தமாக 963 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும். 0-100 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் தொட்டுவிடும்.
இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 350 கிமீ வேகம். மொத்தம் 499 லாஃபெராரி ஹைப்பர் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. இதற்கான, தகுதியுடையவர்கள் கொண்ட 700 பேர் பட்டியலை ஃபெராரி தேர்வு செய்துள்ளது. இந்த பட்டியலை மேலும் இறுதி செய்து கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளன. லாஃபெராரியின் அதிகாரப்பூர்வ படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃபெராரியின் புதிய சூப்பர் கார்

ஃபெராரியின் புதிய சூப்பர் கார்

ஃபெராரியின் புதிய சூப்பர் கார்

ஃபெராரியின் புதிய சூப்பர் கார்

ஃபெராரியின் புதிய சூப்பர் கார்



Click it and Unblock the Notifications








