பெரிய செடான் கார்களுக்கான கூடுதல் வரி திரும்பெற வாய்ப்பு!
மத்திய பட்ஜெட்டில் எஸ்யூவி கார்கள் வரையறையில் சிக்கிய செடான் கார்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை மத்திய அரசு திரும்ப பெறு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பட்ஜெட்டில் 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட கார்களும், 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களும் எஸ்யூவி ரக கார்களுக்கு வரையறுக்கப்பட்டு வரி உயர்த்தப்பட்டது.

ஆனால், இந்த வரையறையில் மாருதி எஸ்எக்ஸ்-4, டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் உள்ளிட்ட சில செடான் கார்களும் சிக்கின. இதனால், அந்த கார்களின் விலையை ரூ.15,000 முதல் ரூ.35,000 வரை உயர்த்த வேண்டிய நிலையில் கார் நிறுவனங்கள் இருக்கின்றன.
எஸ்யூவி கார்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை வாபஸ் பெற சியாம் அமைப்பு வலியுறுத்தியது. ஆனால், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில், எஸ்யூவி கார்களுக்கு வரையறுக்கப்பட்ட விதிகளில் செடான் கார்களும் சிக்கியதால் விற்பனை படுமோசமாவதற்காக வாய்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த வரையறையில் வரும் செடான் கார்களுக்கு கூடுதல் வரியிலிருந்து விலக்கு அளிக்குமாறு சியாம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, செடான் கார்களுக்கான கூடுதல் வரி விதிப்பை மத்திய நிதி அமைச்சகம் திரும்ப பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








