ஜூலை 3ல் விற்பனைக்கு வருகிறது புதிய நிசான் மைக்ரா
அடுத்த வாரம் புதன்கிழமை மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய நிசான் மைக்ரா கார் மும்பையில் நடைபெறும் விழாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. வடிவமைப்பில் மாறுதல்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் கூடிய மைக்ரா காரை தாய்லாந்து மற்றும் இங்கிலாந்தில் நிசான் அறிமுகம் செய்தது.
இதைத்தொடர்ந்து இந்த கார் தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது. எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது. தற்போது விற்பனையில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

















Click it and Unblock the Notifications








