ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்... த்ரில் அன்லிமிடேட்..!!
ஹாலிவுட் சினிமாவில் கார் சேஸிங் காட்சிகள் பிரபலம். கார் சேஸிங் காட்சிகள் படத்திற்கு இடையிலோ அல்லது கிளைமாக்சில் விறுவிறுப்பு கூட்டுவதற்காக இணைக்கப்பட்டிருக்கம். ஆனால், ஒரு படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நிறைந்த கார் சேஸிங் காட்சிகள் இருந்தால் எப்படியிருக்கும். ஆம், அதுபோன்ற விறுவிறுப்பான கார் சேஸிங் காட்சிகலுடன் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் ஆக்ஷன் பட வரிசைதான் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்.
ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போன்று ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தின் 6ம் பாகம் வரும் மே24ல் வெளியாக உள்ளது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் டிரெயிலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. யு டியூபில் அதிக பார்வைகளை பெற்று வரும் இந்த படத்தின் டிரெயிலர், இந்த படங்களில் பயன்படுத்தப்பட்ட கார்கள் மற்றும் இதர தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறு அறிமுகம்
த்ரில்லை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டு வரும் இந்த படங்கள் முதலில் 1939ல் வெளியானது. அடுத்து 1955ம் ஆண்டில் இரண்டாம் படம் வெளியானது. இதே வரிசையில் ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் பாகம் 1 கடந்த 2001ல் வெளியானது. ராப் கோஹன் இந்த படத்தை இயக்கினார். நியூயார்க் நகரின் ஸ்ட்ரீட் ரேஸிங் காட்சிகள் நிரம்பிய விபே இதழில் வெளியான ரேஸர் எக்ஸ் என்ற கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. பால் வால்க்கர், வின் டீசல், மிச்செல் ரோட்ரிகிஷ் மற்றும் ஜோர்டானா புரூஸ்டெர் ஆகிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்தனர்.

படத்தின் பிற பாகங்கள்
ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் பட வரிசையில் இரண்டாம் பாகம் 2003ம் ஆண்டும், மூன்றாம் பாகம் 2006ம் ஆண்டும், நான்காம் பாகம் 2009ம் ஆண்டிலும், ஐந்தாம் பாகம் 2011ம் ஆண்டிலும் வெளியானது. இந்த நிலையில், இந்த படவரிசையில் 6ம் பாகம் வரும் மேமாதம் 24ம் தேதி ரிலீசாகிறது.

பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 6
மே மாதம் வெளியாக இருக்கும் படத்தின் கதையை கிரிஸ் மார்கன் எழுதியுள்ளார். ஜஸ்டின் லின் இயக்கியிருக்கிறார். வழக்கம்போல் வின் டீசல், பால் வாக்கர், தியானே ஜான்சன், மிச்செல் ரோட்ரிகிஷ், ஜோர்தனா புரூஸ்டெர் ஆகியோர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

ஷூட்டிங் விபரம்
2010ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கியது. இதுவரை வெளிவந்த படங்களில் சுரங்கப் பாதை கார் சேஸிங் காட்சிகள் கொண்டதாக எடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த படத்தில் முதன்முறையாக சுரங்கப் பாதையல்லாத சாலைகளில் கார் சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

பயன்படுத்தப்பட்ட கார்கள்
ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படங்களின் சேஸிங் காட்சிகளில் ஒவ்வொரு படத்திலும் சில கார்கள் முக்கிய கதாபாத்திரங்களின் கையாளாக செயல்பட்டிருக்கின்றன. அடுத்து வரும் படங்களில் இந்த தகவல்களை காணலாம்.

1970 டோட்ஜ் சார்ஜர்
இந்த படத்தில் டோட்ஜ் சார்ஜர் ஆர்டி கார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் பாக சினிமாவில் இரண்டு முறை சுவரின் மீதும், டிரக்கின் மீதும் மோதி உருக்குலைக்கப்பட்ட இந்த காரில் 900 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 200 கிமீ வேகம் வரை பறக்கும்.

டொயோட்டா சூப்ரா
டோட்ஜ் சார்ஜர் தவிர கஸ்டமைஸ் செய்யப்பட்ட டொயோட்டா சூப்ரா காரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. டோட்ஜ் சார்ஜரில் தப்பிக்கும் வில்லனை இந்த காரில்தான் விரட்டிப் பிடிப்பார். 1994ம் ஆண்டு மாடலான இந்த கார் துருப்பிடித்த நிலையில் இருந்தது. இதனை வாங்கி ரூ.50000 டாலர் மதிப்பீட்டில் கஸ்டமைஸ் செய்யப்பட்டதாம். 276 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இதன் 3.0 லிட்டர் எஞ்சின் 554 பிஎச்பி ஆற்றல் கொண்ட வகையில் மாற்றப்பட்டது.

நிசான் ஸ்கைலைன் ஜிடிஆர்34
இரண்டாம் பாகத்தில் நிசான் ஸ்கைலைன் ஜிடிஆர் ஆர்34 ஸ்போர்ட்ஸ் கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு மாடலான இந்த கார் ஏராளமான வசதிகளுடன் மாற்றப்பட்டது. 0-100 கிமீ வேகத்தை 6.0 வினாடிகளில் எட்டும் வகையில் எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

மிட்சுபிஷி எக்லிப்ஸ் ஸ்பைடர் ஜிடிஎஸ்
இரண்டாம் பாகத்தில் மிட்சுபிஷி எக்லிப்ஸ் ஸ்பைடர் ஜிடிஎஸ் காரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா மார்க்கெட்டிற்காக மிட்சுபிஷி தயாரித்த கார் மாடல். 210 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஃபோர்டு மஸ்டாங்
மூன்றாம் பாகத்தில் ஃபோர்டு மஸ்டாங் ரேஸ் கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், படத்தில் பயன்படுத்தப்பட்ட காரில் நிசான் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.

மிட்சுபிஷி லான்சர் எவோலுயூசன் ஐஎக்ஸ்
ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் மூன்றாம் பாகமான டோக்கியோ டிரிப்ட் படத்தில் மிட்சுபிஷியின் பெர்ஃபார்மென்ஸ் செடான் காராக வர்ணிக்கப்படும் மிட்சுபிஷி லான்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 405 எச்பி பவரை வெளிப்படுத்தும் எஞ்சின் கொண்டது.

புயிக் கிரான்ட் நேஷனல்
ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிப்பு. ஸ்போர்ட்ஸ் செடான் ரகத்தை இந்த கார் நான்காம் பாகத்தில் பயன்படுத்தப்பட்டது. படத்தில் ஆயில் டேங்கர்களை கடத்தும் முக்கிய சேஸிங் காட்சியில் இந்த கார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த காரில் 200 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

டோட்ஜ் சேலஞ்சர் 2010
ஐந்தாம் பாகத்தில் டோட்ஜ் சேலஞ்சர் 2010 மாடல் கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிளைமேக்ஸ் சேஸிங் காட்சிகளில் இந்த கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 250 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

போர்ஷே ஜிடி3 ஆர்எஸ்
ஐந்தாம் பாகத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றொரு முக்கிய கார் மாடல் போர்ஷே ஜிடி3 ஆர்எஸ். 3.8 லிட்டர் எஞ்சின் கொண்ட இந்த கார் 450 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மணிக்கு 310 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது.

நிசான் ஜிடிஆர்
இறுதியாக தற்போது வெளிவர இருக்கும் ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6ம் பாகத்தில் நிசான் ஜிடிஆர் கார் கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்துக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்ட காரின் கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.



Click it and Unblock the Notifications








